பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

 இதற்காக ஒரு கதையையும் கூறி வந்திருக்கின்ருர்கள்.

கிரேக்க நாட்டில் ஓரிடத்தில், ராணியாக ஒருத்தி இருந்தாள். அவ்வாறு ராணியாக வரத்தகுதி-ஒன்று அவள் கோயில் பூசாரியாக இருக்க வேண்டும். அல்லது. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீராங்கனையாக. இருக்க வேண்டும் என்பது விதி.

எந்த வழியிலேயோ ராணியாக வந்து விட்டவள் ஒருத்தி. விளையாட்டுப் போட்டி ஒன்றை நடத்துவாள். நாடு முழுவதிலுமுள்ள கட்டிளங்காளைகள், இளைஞர்கள் அத்தனை பேரும் வந்து. ஆர்வமாக அல்ல. அல்ல, ஆவேசமாகக் கலந்து கொள்வார்கள்.

காரணம், நம்ப முடியாத பரிசல்லவா அவர்களுக்குக் கைமேல் கிடைக்கிறது !

போட்டிகளில் வென்ற தலையாய வீரனுக்கக் கிடைக்கும் பரிசு... அந்த ராணிக்குக் கணவகை ஆகிவிடுவதுதான்.

ஆமாம்! அழகிய ராணி. அந்தப்புற வாழ்க்கை, அரச பீடம், ஆட்சியின் மாட்சி...எல்லாமே ஒரேநாளில் கிடைக்கும்.

எத்தனை ஆண்டுகள் அவனுக்குக் கிடைக்கும்?

49 அல்லது 50 முழு நிலாக்காலம் வரை,

அதாவது 4 ஆண்டு காலம்.

அதற்குப் பிறகு.? ராணியானவள் மீண்டும் போட்டி விளயாட்டுக்களை நடத்துவாள். நாட்டிலுள்ள அத்தனை வீரர்களும் இளைஞர்களும் வந்து போட்டியிடுவார்கள்.

ராஜாவும் தான் போட்டியிடுவார். கட்டாயம் போட்டியிட்டே தீர வேண்டும்.