பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. ஆண்களுக்கு எத்தனை ஆண்டுகள் வலிமை இருக்கும்?


இது என்ன கேள்வி !

ஆண்களுக்கு இல்லாத வலிமையா? எத்தனை ஆண்டுகள் எத்தனே ஆண்டுகள் என்று எப்படி சொல்ல முடியும்? ஆயுள் முழுவதும்தான்! வலிமை என்பது ஒருவரின் உச்சக் கட்ட வலிமை! எல்லா சக்தியும் ததும்பி நிற்கும் அந்த வலிமை எத்தனைஆண்டுகள் உடலில் தங்கி இருக்கும்?

இந்த கேள்விக்குப் பதில் 4 ஆண்டுகள்!

நான்கு ஆண்டுகள் தானா? நம்ப முடியவில்லையே!

இப்படித்தான் நம்பியிருந்தார்கள் பழங்கால கிரேக்க நாட்டினர். உடலே கோயில் உடலே தெய்வம் என்று வாழ்ந்தவர்கள் தான், இப்படி நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையை வைத்துத்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் பந்தயம் நடத்தவேண்டும் என்றும் திட்டமிட்டார்கள். செயல்பட்டார்கள்.