பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46


படித்து கடைபிடித்து வந்தால், கட்டான உடம்பைப் பெற்றுக் கொள்ளலாம். அது காட்சிக்குக் காட்சி. கவர்ச்சிக்குக் கவர்ச்சி.

உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிவிட்டால், உடலில் இறுகிய தசைப்பகுதிகள் (Muscles) வீணாகி, சதைப்பகுதிகள் (Flabley Muscles) அதாவது கொழ கொழாத் தசைப் பகுதிகள் நிறைந்து விடுகின்றன.

அதனால் குண்டான தோற்றம். அப்படியிருந்தால் கடோத்கஜன் என்றும், பெண்களை மலையரசி குண்டோதரி என்றும் கேலித்தானே செய்வார்கள்.

நல்ல உடல் தோற்றம், நலமான உடல் அமைப்பு ஒருவருக்கு இருக்கவேண்டும் என்றால், உடலில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு (Fat) அமைந்திருக்க வேண்டும் என்று உடற்கூறு வல்லுநர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.

பெண் என்றால், அவளின் மொத்த எடையில் 20 சதவிகிதம் கொழுப்பு இருக்க வேண்டும்.

ஆண் என்றால் அவனின் மொத்த எடையில் 16 சதவிகிதத்திற்குள்ளாக இருத்தல் வேண்டும்.

அப்படியிருந்தால் அது ஆரோக்கியமான உடம்பு. அழகான உடம்பு. ஆற்றல் மிக்கதொரு உடம்பு.

விளையாட்டு வீரர்கள், ஒட்டக்காரர்கள் இவர்களது உடலை சற்றே உற்றுப் பாருங்கள். கம்பீரமாக இருக்கும். கவர்ச்சியாகத் தெரியும். காரணம் ?

அவர்களது உடலில் உள்ள கொழுப்புப்பகுதி 5 முதல் 10 சதவிகிதம் தான் இருக்கிறது அவர்களது மொத்த எடையில்.