பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 5. வலிமையால் வரும் லாபம் ! 1. உனது உடல் தோற்றமும் தோரணையும் பொலிவு. பெறுகிறது உடல் வலிமையும் நலமும் உள்ளவர்களுக்கு ஒரு செம்மாந்த தோற்றம் சேர்ந்து கொள்கிறது. வாளிப்பான உடல் அமைப்பு- வளமான தோரணை. நிமிர்ந்த தோற்றம்- நேர் கொண்ட பார்வை. நிதானமான அதே நேரத்தில் அழுத்தமான |B5%l-. எல்லாமே சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை வழங்கு. கிறது. பார்ப்பவர்களிடையே மேம்பட்ட மனிதராக உயர்த்திக். காட்டுகிறது. அத்துடன், சுய மரியாதையை சுவீகரித்துத் தருகிறது. தன்னம்பிக்கையை தளராமல் வளர்த்து விடுகிறது. இதனால் கம்பீரமான வாழ்க்கை வந்து களைகட்டிக் கொள்கிறது. 2. எடைக் கட்டுப்பாட்டோடு கூடிய எழிலார்ந்த, தேகம் ஒழுங்கான உடற்பயிற்சி. சமநிலை. சரிவிகிதத்தில் அமைந்த சத்தான உணவு. உற்ற நேரத்தில் ஓய்வு. இந்த மூன்று பழக்கங்களும் உடலுக்கு ஒரு முத்தாய்ப் பான தோற்றத்தைத் தருகின்றன. உடலுக்கு எடை ஏறாமல் பார்த்துக் கொள்கின்றன. ஒருவருக்கு எடை எவ்வளவு தேவை என்பது அவரது பால், வயது, உயரம், உடல் அமைப்பு இவற்றைப் பொறுத்தே அமையும். - ஒருவர் எவ்வளவு எடையுடன் இருக்க வேண்டும் என்பதற்கான எடை அட்டவணைகள் உண்டு. அதனைப்