பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இதே ! 1 . சாதாரணமாக உடல் இயங்கும் ஆற்றலை விட, தேகம் அதிக ஆற்றலைப் பெறுகிறது. திறமைகளை வளர்த்துக் கொள்கிறது. சிறப்பாகப் பணியாற்றுகிறது. 2. உடல் மூழுதும் சீரான இரத்த ஓட்ட த்தை மிகு திப் படுத்துகிறது. விரைவுப் படுத்துகிறது அழுத்தம் இல்லாத இரத்தக் குழாய்க ைனக் கட்டிக் காக்கிறது. இதனால் இதயத் திற்கு அதிக வேலை தராமல், செழுமையுடன் இரத்தம் பாய்ச் சிட வகை செய்கிறது. இதய சம்பந்தட்பட்ட பல நோய்கள் பிறக்காமல் தடுத்திருக்கிறது. 3. வாலிப காலத்தை நீட்டித்துத் தருகிறது. இளமைக் குரிய வலிமைக் குணங்களை வளர்த்து விடுகிறது. முதுமை தலை நீட் டாமல் பார்த்துக் கொள்கிறது. ஆமாம். வீட்டொழு தும் உடலாலும் ஊனதாலும் இளமையாகத் தோன்றவும் இளமையாக வாழவும் துணை செய்கிறது. 4. திறநிலை மிகுந்த வலிமையான தேகத்தில் ஊளைச் சதைகள் உட்புகுவதில்லை. உபத்திரம் தருவதில்லை. அதிக எடை உடலுக்கு வகுவதில்லை. அழகான, வாலிபமான, உடல் அமைப்பை, உருவப் பொலிவை, முகத் தெளிவை இது தந்தருள்கிறது. 5. ஆக, ஒருமனிதன் உடலாலும் உள்ளத்தாலும் நோ னுகா நன்னிலையைப் பெற்று, முழுமையான மனித வாழ்வு வாழ இது வழி வகுத்து நடத்திச் செல்கிறது.