பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலம்ப,உடலோ தடுமாற, கண்களோ செருகிக் கொள்ள,ஒய்வு தேடி விழுந்து விடுகிறான்

இனி கடினமான ஒரு வேலையைச் செய்யும் போது.


1.உள்ளுக்கு இழுக்கும் உயிர்க் காற்றின் அளவு பலமுள்ளவனுக்கு அதிகமாகும். பலமற்றவனுக்குக் குறையும்.

2.வேலையைத் தொடர்ந்து செய்யும் ஆற்றலும்,களைப்படையும் நேரமும் அதிகமாகிப் போகும்.

பலமற்றவனுக்கு இந்த ஆற்றல் ஆற்ற சக்தி விரைவில் வந்து, களைப்படையச் செய்துவிடும்.

3.விரைவில் களைப்பு நீங்கும் சக்தி பலமுள்ளவனுக்கு உண்டு. பலமற்றவன் மீண்டும் பழைய நிலை பெற நீண்ட நேரம் பிடிக்கும்.

4.நாடித்துடிப்பு விரைவில் சகஜ காகிவிடும். பலமற்றவனுக்கு வெகுநேரம் பிடிக்கும்.

வலிமையுள்ள பலசாலிக்கு வாழ்க்கை முழுவதும் யோகம் தான். எப்படி என்றால் இப்படித் தான்.

உலகில் பிறந்த அனைவருமே நலம் உள்ளவர்கள்தான். ஆனால் பலம் உள்ளவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.

பலம் நிறைந்த திறநிலை உடையதாக நாம் இருப்பது எக்காலத்திலும் நல்லது என்பதுதான் நமது வாதம்

பொதுவாக, சாதாரண உடல் நலம் உள்ளவன், சக்தி வாய்ந்த உடல் பலத்தை வளர்த்துக் கொண்டால், கட்டிக் காத்துக் கொண்டால் என்ன நன்மை?