பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

நீங்களும் வலிமையோடு வாழலாம் எனும் இந்நூல் ஓர் உடல் நல நூலாகும். வலிமையுடன் வாழ வேண்டும் என்ற அமைப்புடன் படைக்கப்பட்டது நமது உடலாகும்.

வாழ்க்கையில் வசதிகள் பெருக பெருக, உழைக்கும் கைகளும் கால்களும் ஒதுங்கிக் கொள்ளவே, எந்திரங்களும் எலக்ட்ரானிக் சாதனங்களும் இணை பிரியாத வேலைக் காரர்களாகி விட்டன.

உழைப்பில் மலரும் உடலானது, ஒய்வில் விழுந்து, கொஞ்சங் கொஞ்சமாக இன்பத்தில் மகிழ்ந்து, நாளடைவில் நலியத் தொடங்கியது.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நோய்க் கூட்டம், கழுத்தை நெறிப்பதுபோல வந்து உடல் மீது ஏறி கவ்விப் பிடித்துக் கொண்டன.

"நான் சுகமாக இருக்கிறேன்’ என்று சொல்பவர்களையே இன்னும் கொஞ்ச நாட்களி ல் பார்க்க முடியாது என்னும் பரிதாபமான சூழ் நிலை உருவானாலும் நாம் ஆச்சரியப்ப்ட முடியாது. அப்படி இருக்கிறது. சமுதாய அமைப்பு.