பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 "நான் மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் தினமும் இத்தனை வகை மருந்துகளை உட்கொள்ளுகிறேன்’ என்று பெருமையடித்துக் கொள்ளும் பீற்றல் மக்களிடையே .பெருகிக் கொண்டு வருகிற காலமாகிக் கொண்டிருக்கிறது.

பழுதுபட்ட கடிகாரத்தைத் தூக்கியெறி என்கிறோம். பயன்படாத பொருட்களை அப்புறப்படுத்து என்கிறோம். ஏன்?

உழைக்கப் பயன்படாத ஒரே காரணத்தால் தானே !

உழைப்பதற்காகத் தோன்றிய மனித உடலை, உதியமரம் போல வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் நிலையும் இப்படித் தானே !

மற்ற பொருட்களின் நிலைக்கு அப்படி விளக்கம் சொல்பவர்கள், மனித உடல் கெடும் போது மட்டும் விதி'யை இழுத்துக் கொண்டு விடுகின்றார்களே ! அது ஏன் ?

உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் அதைப் பராமரிக்கும் முறைகளில் தான் இருக்கிறது.

பிறவியிலே தோன்றும் நோயாளிகளை நாம் இந்த நிலைக்கு இழுக்க வேண்டும்.

முயன்றால் மனிதர்கள் நிச்சயமாக வலிமையை வளர்க்கலாம். வலிமையாக வாழலாம் என்கிற கருத்தினை உணர்த்துவதற்காக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

"எ த்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறோம் என்பதை விட, இருக்கும் காலத்தில் எத்தனை நாட்கள் நோயற்று வாழ்ந்தோம், வலி மையான உடலோடு வாழ்வாங்கு வாழ்ந்தோம் என்பது தான் உண்மையான கணக்காகும்.