பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49


பல்லவா! மகத்துவம் பெற்ற வாழ்க்கையல்லவா! அது தான் மாபெரும் பேறு பெற்ற வாழ்வல்லவா! அது வலிமையான உடலால் மட்டுமே வரக் கூடியதாகும் .

4. சவாலை சமாளிக்க முடியும்!

வாழ்க்கை என்பது எதிர்பாராததை நடைபெறச் செய்வது. புத்திசாலியான மனிதன் என்பவன் எதிர்பாராத செயல்களை யும் தனக்குச் சாதகமாக மாற்றியமைத்து சந்தோஷப்படுபவன்

அன்றாடம் அடுக்கடுக்காக எதிர் வருகின்ற எதிர்பாராத சவால்களை ஏற்கின்ற ஆற்றல், தீர்க்கின்ற சாமர்த்தியம், திகைப்பையும் மாற்றி மாற்றி திருப்தியாக வாழும் ஆண்மை எல்லாம், வலிமையுள்ள மனிதர்களுக்கே உண்டாகும் வல்லமைகளாகும்.

மனதாலும் உடலாலும் வலிமையாக வாழ்கின்றவர்களே,சவால்களை சந்திக்கத் தயாராக இருக்கின்றனர்; சாமர்த்திய மாக சமாளிக்கின்றனர்.

அவர்கள் சவால்களுக்கேற்ப தங்கள் சந்திக்கும் தந்திரங்களில் வேகமாக இருக்கின்றனர். விவேகமாக போரிடுகின்றனர்

அதற்கேற்ற படி, வலிமையான உடலானது வலிமையாக இயங்குகின்ற ஆற்றலை வலிமையான தசைகளுக்கு ஊட்டு கின்றன. அதனால் வலுவான தசைகள் நீண்ட நேரம் நின்றுதாக்குப் பிடிக்கக் கூடிய தொடர் ஆற்றலை (Endurance) சக்தியைப் பெறுகின்றன.

5. வாழ்வெலாம் சந்தோஷமே!

உடலால் வலிமையுள்ளவன் எப்பொழுதுமே வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறான். அவனது சந்தோஷமே. வாழ்வாகவும் தொடர்கிறது.