பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 தனது தேகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கு ஒரு விதத் திருப்தி ஏற்படுகிறது. தெம்பு உண்டாகிறது. தற்பெருமை விளைகிறது. தன்னம்பிக்கை வளர்கிறது. தைரியம் தொடர்கிறது. வலிமையற்றவனோ, சும்மா நிற்கும் பொழுதே வளை கிறான். நடக்கும் பொழுதே நெளிகிறான். எதையோ பறி கொடுத்தது போல உணர்வுடன் நடமாடுகிறான். உணர்ச்சி வசப்பட்டு அல்லாடுகிறான். தளர்ச்சியால் தள்ளாடுகிறான். எனவே, வலி ைமயற்றவன் பொலிவுற்றவனாகிறான். வலிமையானவன் வானளாவிய மகிழ்ச்சியால் தி ைகக்கிறான். ஏனென்றால், அவளது ஆற்றல் மிகுந்த வலிமையான தேகம் அப்படிப்பட்ட அசகாய சூழ்நிலையையல்லவா தோற்றுவிக் கிறது. - 6. ஓய்வும் உல்லாசமும்! - வலிமையானவன் ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தித் குள்ளேயே முடித்து விடுகிறான். ஒரு முகத்துடன், முனைப்பு டன் பணியாற்றும் சிறப்பை வலிமை வழங்கி விடுவதால், விரைவில் முடிவடைகின்ற வேலை அவனுக்கு நல்ல ஓய்வையும் அணிக்கிறது. ஒய்வு நேரம் வரும் பொழுது, உடலிலே இன்னும் சக்தி இருப்பதால், மனதுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய உல்லரச தி கூழ்ச்சிகளில் பங்கு பெறுகின்ற வாய்ப்பும் வசதியும் கிடைக் கிறது. - வேலைக்குப் பிறகு களை ப்படைந்து போகின்ற சக்தி பbறவனால் ஒய் வினை அனுபவிக்க முடியாது. உல்லாசத்தை தினைத்துப் பார்க்கவும் முடியாது.