பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வளவு சீக்கிரமாக ஒரு குறிப்பிட்ட இயக்கமானது, குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கப்படுகிறது என்ப தைக் குறித்துக் காட்டவே இந்தத் திறன் பார்க்கப்படுகிறது. ஒருவ நூறு மீட்டர் தூரத்தை 10 வினாடிகளுக்குள் ஓடி முடித்து விடுகி அார். அதே தூரத்தை ஒருவர் 20 வினாடி களில் ஒடி முடிக்கிறார் என்றால், இருவருக்கும் உள்ள விரை வாக இயங் கும் தன்மையை நம்மால் அறியமுடிகிறது. அதிக விரைவாக இயங்குகிற ஆற்றல் உள்ள ஒருவர், அதிக சக்தியும். தேக நலமும் நிறைந்தவராகக் காணப்படு கின்றார் என்பதாகவே உறுதி செய்யப்படுகிறார். (ஆ) சக்தி சாலையை ஒருவர் கடந்து செல்கிறார். எதிரே ஒரு கார் வந்து விடுகிறது. தன் மீது மோதாமல் இருக்க அவர் வேகமாக இயங்கித் தப் பித்து வர முயற்சி செய்கிறார். அந்த அதிக வேகமும், இயங்கும் திறமையும் தான் உடலின் சக்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்தி தசைகளின் திறத்தால் தான் விளைகிறது. தசைகளின் வலிமையும், தசைகள் இயங்கும் வேக மும் தான் இப்படிப்பட்ட சக்தியை உண்டு பண்ண முடியும். ஒரு குறிப்பிட்ட நோத்திற்குள்ளாக, உடல் இயங்கி செயல்பட்டு முடிக்கின்ற ஆற்றலைத் தான் சக்தி என்று கூறு கின்றார்கள். - விளையாட்டுக்களில் தான் இப்படிப்பட்ட விசைவியக்க சக்திகளும்திறன்களும் தேவைப்படுகின்றன. உண்டாகின்றன. விசை ேபாட்ட மான 100 மீட்டர் துரம், 200 மீட்டர் தூரம், 400 மீட்டர் தூரம் போன்ற ஓட்டங்களில், இந்தத் திற சக்தியை நாம் பார்க்கிறோம். -