பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 மூன்றும் படி : முதல் படியில் உறுப்புக்களை மசாஜ் செய்கின்ற முயற்சி களில் ஈடுபடுகின்றீர்கள். இரண்டாம் படியில், தசைகளை உருவாக்கவும், அந்தக் தசைகளில் நீடித்துழைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வும் முயற்சித்திருக்கின்றீர்கள் . மூன்றாவது படியில், தசைகளை வலிமையுடையதாக மாற்றி அமைக்கும் பணியாக அமைத்துக் கொள்கின்றீர்கள். 1 . சுவற்றுப் பயிற்சி. ஓரடி தள்ளி நின்று கைகளை ஊன்றி, பிறகு மார்புறச் செல்வது போல போய் வருதல். முன்பு 20 முறை செய்ததை, இப்பொழுது 40க்குக் குறை யாமல் செய்யவும். 2. தண்டால் பயிற்சிகள் (படம் காண்க) உடல் எடையை கைகளிலும், கால் விரல்களிலும் இருப்பது போல் இருந்து, முச்சை நன்கு உள்ளுக்கு இழுத்துக் கொள்ளவும். (முதல் படம்) o பிறகு தரைக்க இணையாக உடல் இருக்குமாறு கைகளை மடக்கி உடலைக் கொண்டு செல்லவும். பிறகு, மேலே எழும்பி வந்து மூச்சு விடவும் (படம் பார்க்கவும்) 40க்கு மேல் செய்யவும்.