பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3岛 கயிறுதாண்டிக் குதித்தல் ஆதிகாலந் தொட்டு மக்களிடையே பரவியுள்ள பழைய பயிற்சி. ஆனால் சற்று எளிமையாகத் தெரியும் கடுமையான பயிற்சி. ஒரு மனிதரை சோதனைக்கு உள்ளாக்கி அவர் உடல் வலிமையைத் தெரிந்து கொள்ளச் செய்யும் பரிசோதனைப் பயிற்சி என்றும் கூறுவார்கள். ஒரு கிரேக்கப் பெண், 000 தடவை கயிறு தாண்டிக் குதி க்கும் பொழுது, மூச்சு முட்டி இறந்து போனாள் என்ற ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு. ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இந்தப் பயிற்சி இருதயத்திற்கும், நுரையீரலுக் கும் உரிய சிறந்தப் பயிற்சியாகும். காடித் துடிப்பை அதிகமாக்கும் நவீன முறை இது. இருதய ஓட்டத்தை விரைவு படுத்தும் இதமான முயற்சி. தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், தன் தேகத்தைத் தாண்டிக் குதிக்கச் செய்து, உடலை ஒப்பற்ற முறையில் இயங்கிடச் செய்து உதவுகின்ற பயிற்சியாகும். உடல் இயக்கத்தின் நளினத்திற்கும், உடல் உறுப்புக்கள் வலி ைமக்கும் இப்பயிற்சியை எல்லா வல்லுநர்களுமே சிபாரிசு செய்கின்ருர்கள். கயிறு தாண்டிக் குதிக்கும் பயிற்சியை கொஞ்சங் கொஞ்ச மாக எண்ணிக்கையில் உயர்த்திக் கொண்டே செல்வது அறிவுடமையாகும்.