பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

495 இதய நோய் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும். பணி நேரம் போக, உ. லுறுப்புக்கள் இதம் பெறும் வகையில், ஏதாவது உடற்பயிற்சிகளைச் செய்ய நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, அதில் ஈடுபடுங்கள். நேரம் போதவில்லையே என்று பழைய பாட்டையே திரும்பத் திரும்பப் பாடாதீர்கள். * ஏனென்றால், இந்த உலகில் உங்களுக்காக நீங்கள் செய்து கொள்கின்ற ஒரே காரியம் உடலுக்கு பயிற்சி தான். நீங்கள் வாழ்வது உங்கள் குடும்பத்திற்காக. உழைப்பது மனைவி மக்களுக்காக. பொருள் சேர்ப்பது, செலவழிப்பது, அதற்காக அரும்பாடு படுவது எல்லாமே மற்றவர்களுக்காக. பசிக்காக உணவு. களைத்தால் தூக்கம். இவை உங்கள் கட்டுப்பாட்டுக்கு அடங்காத செயல்கள். உங்கள் கடமையும் வேலையும். அதே சமயத்தில் நீங்கள் விரும்பி உங்கள் கட்டுக்கு அடங்குகின்ற செயல்கள் எல்லாம் உடலுக்குப் பயிற்சிகளே! உங்கள் வாழ்க் கையை மலரச் செய்ய, உங்கள் நம்பிக்கை யை ஒளிரச் செய்ய, இலட்சியத்திற்கு உதவ, அடிப்படை யாக விளங்குவது உடல் தானே! அந்த உடலை நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரமாவது பாதுகாக்கக் கூடாதா?