பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 95

சிக்கனத்துடன் செயலாற்றியதையாவது உள்ளுற மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதை அறிவேன்.

நினைவு - 10 : பதினைந்த நாட்கள் திரு. இராமச்சந்திர அய்யர் வீட்டில் தங்கியிருக்கும் போது அவர் வறிய குடும்ப நிலை, கைத்தறி வேட்டியை உடுத்தும் பழக்கம், அதனைத் தாமே குழாயில் துவைத்து நீர்க்காவி ஏறிய நிலையில் உடுத்திய நிலை இவற்றை அறிந்தேன். சட்டை, கோட், அங்கவஸ்திரம் இவை மட்டிலும் லாண்டரிக்குப் போட்டு வாங்கப்படுபவை. இவருக்கு ஏதாவது அன்பளிப்பு செய்ய வேண்டும் என்று நினைவில் வைத்திருந்தேன். திரு. இராமச்சந்திர அய்யர் வறுமைநிலையை விட என்நிலை மிகவும் கொடுமையாக இருந்தது. ரூ. 40/= மாத ஊதியத்தில் எதைத்தான் செய்யமுடியும்?

100க்கு 80 நம்பர் நூலில் நெய்யப் பெற்ற சிவராயர் கரை போட்ட வேட்டி 6 சோடி அனுப்ப நினைத்தேன். துரையிடம் இதைச் சொன்னேன். அவரும் தம் வெளியுறவு அமைச்சர் இலிங்கையர் மூலம் தாத்தையங்கார்பேட்டையிலிருந்து 6 சோடி வேட்டிகளைத் (பச்சை, சிவப்பு, ஊதா, கறுப்பு கரைகள் தருவித்துத் தந்தார். இவற்றை இராமச்சந்திர அய்யர் வாங்கிக் கொள்ளார் என்பதை அறிந்த நான் அவற்றை அவர் துணைவியார் பெயருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைத்தேன்

நினைவு - 11 : இது நினைவுச் சிதறல்களாக வடிவெடுகின்றது. பள்ளிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் பள்ளியிலேயே ஒரு சிறிய இல்லம் கொடுக்கப்பட்டது. சம்பளம் ரூ. 40/= அதிலும் ரூ. 5= பிடித்தம், உழைப்பதற்கு வசதியாக இருக்கும் என நினைத்து மகிழ்ச்சியாக அதில் வசித்தேன். மாதம் ரூ. 8/- என்று வாடகை விதித்தார். இதற்கு மேல் அவர் பையன், மகள் இவர்கள் படிப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். புதுப்பள்ளியாததால்

6. இவர் துரை மேற்கொண்டிருக்கும் கந்து வட்டித் தொழிலுக்கும், சரிகை வணிகத்திற்கும், உடந்தையாக இருந்து பணிபுரியும்.உணர்நிலைத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் விரசைவர்.