பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 117

கிடைத்த செல்வம்போல் அமைந்தார். இத்தகைய பெரியாரிடம் அடியேனுக்கு ஏற்பட்ட தொடர்பு "நீங்காத நினைவுகளாக" வெளிவருகின்றது

நினைவு - 1 : 1948 - என்று நினைக்கின்றேன். நான் அப்போது துறையூர் பெருநிலக்கிழவர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலம். அப்போது - அதாவது நாடு விடுதலை பெற்ற மறு ஆண்டு - தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு துறையூருகிலுள்ள திண்ணனூரில் நடைபெற்றது. யாரோ ஒரு பெரிய தேசபக்தர் விருந்தோம்புநராக இருந்தமையால் இம்மாநாடு இங்கு நடைபெற்றது. அக்காலத்தில் முதல் கல்வியமைச்சராக இருந்தவர் திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள். நேர்மைக்குப் பேர் போனவர்கள். தாமே பல பள்ளிகளடங்கிய ஒரு பெரிய நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபடியால் ஆசிரியர்களின் குறைகளையும், பள்ளிகளின் அவல நிலையையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.

துறையூர் ஆசிரியர் கூட்டிணைப்பு மாநாடு ஒன்றைத் திண்ணனூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றே அன்றே கூட்ட நினைத்து துறையூர் ஆசிரியர் கூட்டு இணைப்பு மாநாடு நடத்துவது என்றால் எவ்வளவு சிரமம் என்பதை மாநாட்டை நடத்திப் பார்ப்பவர்க்குத்தான் தெரியும் இந்த மாநாட்டுத் தலைவராக இருப்பதற்குப் பேராசிரியர் A. இராமய்யர் திருச்சி தேசியக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஒப்புக் கொண்டார். அடியேன் செயலராகப் பணியாற்றினேன். 700க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கூடும் மாநாடு அது. துறையூரிலிருந்து புறப்படும் ஆசிரியர்கட்குத் திண்ணனூர் வரையிலும் இரண்டு பேருந்துகள் போவதும் வருவதுமாக இருந்தன. திண்ணனூருக்கு அருகிலும் சுற்றிலும் உள்ள ஆசிரியர்கள் அவரவர்கள் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொண்டனர்

2. நான் துறையூரிலிருந்தபோது துறையூர் ஆசிரியர் கூட்டு இணைப்பு (Turaiyur Teachers Federation) argãip off egocoupt' couá Qg7 milé. என்னை அதன் தலைவனாக்கினார்கள். அவசியமானபோது இதன், நிர்வாகக் குழு கூடி முக்கியமான செயல்களைப் பற்றி முடிவெடுக்கும்.