பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 129

"ஒக்க உண்ட பாங்கு" - விசாரித்து உணவு வகைகளைச் சொல்லிச் சொல்லி உண்பித்த சிறப்பு சொல்லி முடியாது உணவிற்குப் பிறகு சில நிமிடங்கள் உரையாடிவிட்டுக் கோவை திரும்பினேன். கோவையில் என் மூத்த மகன் டாக்டர் இராமலிங்கத்தின் சட்டகர் திரு. நடராசன் (சரபாய் மருந்துக் கம்பெனி அலுவலர் இல்லத்தில் தங்கியிருந்தேன் இவர் துணையால் கோவைக்கு அருகிலுள்ள மருதமலை முருகனைச் சேவித்து அவன் திருவருளைப் பெற்றேன்

நினைவு - 8 : மூன்று திங்கள் இணைப் பதிப்பாசிரியராக இருந்த என்னை, ஜூலை 1 முதல் 1978 முதன்மை பதிப்பாசிரியராக நியமித்தனர். மிக உற்சாகமாகச் செயற்பட்டேன் சுமார் நாற்பது கோப்புகளுக்குமேல் சிறந்த துறைவல்லுநர்களிடம் தொடர்பு கொண்டேன் ஒவ்வொரு துறையிலும் கலைக் களஞ்சிய முதற் பதிப்பில் இருந்த துறைகளுக்குரிய பொருட்பட்டியலை அனுப்பி இரண்டாம் பதிப்பில் சேர்க்கப் படவேண்டிய சில தலைப்புகளைக் குறிப்பிட்டு எழுதுமாறும், எழுதக்கூடிய வல்லுநர்களில் ஆறு பெயர்களை முகவரியுடன் தருமாறும் கேட்டு எழுதினேன் அலுவலகத்திலுள்ள துணைப் பதிப்பாசிரியர்கள் உற்சாகத்துடன் செயற்பட்டனர். முதற்றொகுதி சனவரி 1980க்குள் அச்சில் கொண்டுவர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் பெற்றன. ஏசியன் அச்சகம் 14, பீட்டர் சாலை, இராயப் பேட்டை, சென்னை - 14) அச்சு வேலையை முடித்துத் தருவதாக உறுதி கூறியது சுத்தமான (வேதியியல் பொருள் கலக்காமல்) மூங்கிலால் செய்யப் பெற்ற 1000 டன் தாள் தருமாறு கல்கத்தா தாள் கம்பெனியுடன் தொடர்பு கொள்ளப் பெற்றது. 18.9.97 இல் ஈரோட்டில் இரண்டாம் பதிப்பின் முதற்றொகுதியின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. திரு திசு அவினாசிலிங்கம் அவர்கள் தலைமையில் மாண்புமிகு முதலமைச்சர் எம் ஜி இராமச்சந்திரன் விழாவைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு கல்வி அமைச்சர் அரங்கநாயகம் சிறப்புரை வழங்கினர் முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்த அடியேன் நன்றி நவின்றேன்.

9