பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

தாமரைச் செல்வர் டாக்டர் நெது. சுந்தர வடிவேலு

பயிர்போன்றார் உழவருக்குப்

பால் போன்றார் குழந்தைகட்குப் பசும்பால் கட்டித் தயிர்போன்றார் பசித்தவர்க்குத்!

தாய்போன்றார் ஏழையர்க்குத் தகுந்த வர்க்குச் செயிர்தீர்ந்த தவம்போன்றார், செந்தமிழ்நாட் டிற்பிறந்த மக்க ளெல்லாம் உயிர்போன்றார் இங்குவந்தார்

யாம்கொண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?

என்ற பாடலுடன் சுந்தரவடிவேலுபற்றி என் நீங்காத நினைவுகள் தொடங்குகின்றன இது தந்தை பெரியாருக்குப் பாவேந்த பாரதிதாசன் சூட்டிய பாமாலை. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு மலர்: ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாலை என்பது அறியப்படும். இவை தவிர. மக்களின் "புகழ்சொல் மாலை" எண்ணற்றவை. மூடப் பழக்கங்கள், சாதி வேற்றுமை, தீண்டாமைப் போக்கு முதலிய வேண்டாத சமூகநோய் கணிசமாய்க் குறைந்தமைக்கு இந்தப்

1 நாள் மலர்கள் - பக். 88