பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெது. சுந்தர வடிவேலு 143

நினைவு - 3 : 1955இல் இராஜாஜியின் அமைச்சரவை மாறியது. இது வேண்டும்போது காலைப் பிடித்து வேண்டாத போது காலை வளிவிடுவது போன்ற நிலையாக இருந்தது. கட்சி அரசியலில் தோன்றும் எத்தனையோ கயமைத் தனங்களில் இஃதும் ஒரு வகை. நன்றிகெட்ட நிலைமைகளை அரசியல்வாதிகளிடம் அதிகமாகக் காணலாம். மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட காமராசர் தலைமையில் அமைச்சரவை அமைந்தது. திரு. சி. சுப்பிரமணியம் கல்வி - நிதியமைச்சராகப் பணியாற்றியகாலம், இராஜாஜியின் யோசனையின்பேரில் இவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தம் பக்கம் 43 சட்டசபை உறுப்பினர்கள் இருப்பதாக மெய்ப்பித்தமையால் இவருக்கு அமைச்சரவையில் இடம் கிட்டியது என்பதாக அக்காலத்தில் பேச்சு அடிபட்டது. எதிர்த்து நில்லாதிருப்பாரேயானால் இவர் இன்றிருக்கும் நிலையை எட்டிப் பிடித்திருக்க முடியாது என்பது என் கணிப்பு. காமராசர் காலத்தில் தந்தை பெரியாரின் ஆசி சுந்தரவடிவேலுக்கு நிறைய இருந்தமையாலும், நல்ல காரியங்களுக்குத் திரு. சி. சுப்பிரமணியம் குறுக்கே தடைக்கல்லாக நிற்கும் இயல்பு அற்றவராக இருந்தமையாலும், கல்வித்துறையில் திரு. சுந்தரவடிவேலுக்கு அதிகச் சுதந்திரம் இருந்தது. காமராசரும் திரு. சுப்பிரமணியமும் இயல்பாகவே ஏழைபங்காளர்கள். இதனால் திரு. சுந்தரவடிவேலு அவர்களின் செயற்பாட்டிற்குத் தடையாக இருக்கவில்லை. மாறாக ஊக்குவித்து ஆதரவு அளித்தனர். திரு. சுந்தரவடிவேலு அவர்களின் மதிய உணவு, சீருடைத் திட்டங்களை நாடாளுமன்றமும் பாராட்டிப் பேசியது. நூற்றுக்குத் தொண்ணுறுக்குமேல் இலவசக் கல்வி பெற்றிருந்த நிலையைக் கருதினார் காமராசர். மீதி நூற்றுக்குப் பத்துப் பேர்களின் சாதிகள் முற்போக்குச் சாதியின் பட்டியலில் இருந்தமையால், அவர்கள் பரம ஏழையாயிருப்பினும், அவர்கட்கு எந்தவிதச் சலுகையும் இல்லாதிருந்தது. இந்நிலை காமராசர் கவனத்திற்கு வந்தது. சிந்தித்தார். சிந்தித்தார். நிதி நிலைமையையும் சிந்தித்தார். ஆராய்ந்தார். எதோ ஒரு மூலையில் தொடுபடாத நிதிப்பகுதி இருப்பதைக் கண்டார். உடனே எல்லோருக்கும் இலவசக் கல்வி என்று அறிக்கை