பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நீங்காத நினைவுகள்

பேரில் துறையூர் பணியைத் துறந்து கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகப் பணியில் அமரும் பேறு கிட்டுகின்றது குன்றக்குடி அடிகளாரின் அருள் தொடர்பும் ஏற்படுகின்றது. அடிக்கடிக் குன்றக்குடி போய்வரும் வாய்ப்புகள் நேரிடுகின்றன. அடிகளாருக்கும், தந்தை பெரியாருக்கும் நல்ல தொடர்பு. இக்காலத்தில் திரு. சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியில் உயர்ந்திருந்தார்.

என் உயர்நிலைப் பணிக்காலத்தில் தொடர்புள்ள பொதுக் கல்வி இயக்குநர்கள் R.M. ஸ்ட்ராத்தம் துரை (வெள்ளையர் திருமதி 0.C. சீநிவாசன், திரு. D. சதாசிவரெட்டி ஆகியோர். இவர்கள் பெரும்பாலும் “மூலவர்'போல் அலுவலகத்தில் முடங்கிக் கிடப்பவர்கள் உலகோரிடம் - பள்ளி கல்லூரி ஆசிரியர்களிடம் - அதிகம் பழகாமல் தன் முனைப்புடன் திகழ்ந்தவர்கள். திரு. சுந்தரவடிவேலு அவர்கள். திரு. இராஜாஜி முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தந்தை பெரியார் பரிந்துரையால் பொதுக் கல்வி இயக்குநராக உயர்ந்தவர்கள். தம் பதவிக்காலத்தில் தமக்கு முன்னிருந்தவர்களைப்போல் “மூலவர்களாக" முடங்கிக் கிடந்ததற்கு மாறாக உற்சவர்"போல் நாடு நகரம் எல்லாம் வலம் வந்து பள்ளி கல்லூரிகளின் நிலைமை, மக்களின் நிலைமை, ஏழை எளியவர்களின் வாழ்க்கை நிலைமை முதலியவற்றை நன்கு அறிந்து தெளிந்தவர். இவற்றால் தம் பணியின் பொறுப்பை நினைந்து, உணர்ந்து, சிந்தித்துக் கடமைகளை ஆற்றுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில்தான் திரு சுந்தரவடிவேலு குன்றக்குடி வந்திருந்தபொழுது அடிகளார் முன்னிலையில் (1953 அறிமுகம் ஆனேன். பழைய நினைவுகள் படலம் படலமாகத் தோன்றின. திரு. சுப்பிரமணியத்தின் பெருமையைப்பற்றிய பேச்சுகளும் இடையிடையே எழுந்தன. திரு. சுப்பிரமணியத்தின் நேர்மை, துணிவு, திறமை, முதலியவற்றை நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம்

8. இவர் 1953இல் இராசிபுரத்தில் கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியபொழுது அகால மரணம் அடைந்தார்.