பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நீங்காத நினைவுகள்

என்பது என் அதிராத நம்பிக்கை. பிற்கால இலக்கியங்களைப் பின்னர் படித்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

"சங்கப் பாடல்களின் தொகை 2381 என்றும். அவற்றுள் அகத்தினை நுதலியவை 1862 என்றும் நாம் அறிவோம். இவற்றைப் பாடிய 473 சங்கச் சான்றோர்களுள் அகம் பாடியவர்கள் மட்டிலும் 378 பேர்களாவர். அகப் பாடல்களின் மிகுதியான எண்ணிக்கையும் அப்பாடல்களைப் பாடியவர்களின் மிகுதியான தொகையும் அகத்தின்ணயின் சிறப்பைப் புலப்படுத்திகின்றன அகத்திணைப் பாடல்களின் தொகையும், பாடினோர் தொகையும் புறத்தினைப் பாடல்களின் தொகையினும் பாடினோர் தொகையினும் மும்மடங்கு மிக்கிருத்தலை நோக்குங்கால், சங்கப் புலவர்கள் அகம்பாடுவதையே சிறந்த புலமை என் மதித்திருந்தனர் என்ற கருத்து வெளிப்படுகின்றதல்லவா?"

இதனால் டாக்டர் வ.சுபமா வை அழைப்பித்து அகத்திணைக் கொள்கைகளை மாணவர்கட்கு அறிமுகப் படுத்தவேண்டும் எனத் திட்டமிட்டேன். அதற்காகப் பல்கலைக் கழகத்திற்கு எழுதி அதற்காகும் நிதி உதவியும் கிடைக்கச் செய்து கொண்டேன்.

டாக்டர் வ.சுப.மா. (1 தோழி, 2 தாய், 3 தலைவி என்ற தலைப்புகளில் மூன்று பொழிவுகள் நிகழ்த்தினார். இந்த மூன்று பொழிவுகளும் அக இலக்கியத்தின் உயிர்நாடியையேப் பிடித்துக் காட்டிவிட்டார். ஒவ்வொரு பாடலில் வரும் தோழி, தலைவி, தாய், பாங்கன், பாங்கி முதலியோர் வேறுவேறு என்று எடுத்துக் காட்டி விளக்கினார். இவர்கள் யாவரும் "நாடக வழக்காகக்" கவிஞர்கள் படைத்துக் காட்டும் கற்பனை மாந்தர்கள் என்று எடுத்துக் காட்டினார். தொல் காப்பியத்தில் குறிப்பிடப் பெறும் தோழி, தலைவன், தலைவி முதலியோர் கவிமாந்தர்கள் அல்லர். புலவர்கள் கருத்துகள்(Concept) என விளக்கினார்.

5 அகம்-400: குறுந்-401, ஐங்500. (29. 130 கிடைக்கவில்லை. கலி.149;

பரிபா-8, பத்துப்பா-8, ஆகமொத்தம் 1862 ஆனமை காண்க.

6 சுப்பு ரெட்டியார், ந. அகத்திணைக் கொள்கைகள் - பக். 4-5