பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 175

இங்ங்ணம் வாழ்த்திய என் அருமை நண்பர், என்னைவிட சில திங்கள் இளையவர் எனக்கு முன் இறைவனடி சேர்ந்தார்.

நினைவு - 13 : நான் ஓய்வு பெற்றதற்கு அக்டோபர் - 24, 1977) சற்று முன்னோ பின்னோ டாக்டர் மா. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்று காரைக்குடி சுப்பிரமணியபுரத்திலுள்ள "கதிரகம்" என்ற தம் குடிலிலிருந்து கொண்டு தமிழ்ப் பணியும், பொதுப்பணியும் ஆற்றிக் கொண்டிருந்தார். நானும் 1978 பிப்பிரவரி 10 முதல் சென்னையில் தமிழ்க் கலைக்களஞ்சிய இரண்டாம் பதிப்பு முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்தேன். மிகச் சிறந்த முறையில் திட்டம் இட்டு சுறுசுறுப்பாக வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிய ஒருவர் தொடர்ந்து கோள் மூட்டியதாலும், ஆசிரியர்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று போராடியதாலும் நிர்வாகத்தில் ஆட்டம் கண்டது.

முதலில் என்னை வெளியில் அனுப்பத் திட்டம் இடப்பெற்றது. பிப்பிரவரி - 1979 எனக்கு அனுப்பிய ஆணையின் தவறுதலைச் சுட்டிக்காட்டியதால் நிர்வாகம் என் பதவியை நீட்டித்தது. அப்பொழுது நிர்வாகத்திற்கு நீண்ட கடிதம் ஒன்று எழுதினேன். அதன் நகல் ஒன்றை டாக்டர் மாவுக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு டாக்டா மா. அவர்கள் அனுப்பிய மறுமொழி : "5-2-79 - பேரன்புடைய டாக்டர் ரெட்டியார் அவர்கட்கு நலம், சென்னை வந்திருந்தபோது ஒரு செய்தி கேள்விப் பட்டேன். கலைக்களஞ்சியத்தில் தங்களின் ஓராண்டுப் பணி அவ்வளவில் முடிவுற்றதாக அறிந்தேன். அன்றே அவருக்கு திரு. அவினாசி லிங்கம் நீங்கள் நீண்ட மறுமொழி எழுதியபோது விளைவு சுவைப்படாது என்று எனக்குப் பட்டது. களஞ்சியத்தார் உண்மையாக உழைக்கும் ஒருவரைப் பெற்றும் போற்றிக் கொள்ள வில்லை என்பதும் வருத்தம் தருகின்றது. ஆதலின் அவ்வளவில் அதனை விட்டொழியுங்கள். "பெரிதே உலகம் பேணுநர் பலரே” தங்கட்கு நெடிய தமிழ்ப்பணி உண்டு. உடல் நலத்தைப் போற்றிக் கொள்ளுங்கள் - அன்பன் வ.சுப. மாணிக்கம்."