பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.N. நல்லப்ப ரெட்டியார் 17

வாங்கி விருத்தி செய்த நிலப்பகுதியிலேயே பரளியான் தரிசு) அடக்கம் செய்யப்பெற்றதாக அறிந்து மகிழ்தேன்

K.N. நல்லப்ப ரெட்டியார் நல்லவர் வல்லவர் மனத்துக்கண் மாசில்லாதவர். குடிப்பண்பு காத்து வாழ்ந்தவர். சிற்றினம் சேராத சீர்மையர் ஒரு சிற்றுரில் பிறந்து நேர்மையும் நேசமும் பாசமும் மிளிரப் 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்' என்ற பொன்மொழிக்கிணங்க வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இத்தனைக்கும் மேலாக பல்வேறு நோய்களை குலதனமாகக் கொண்டு அவை தரும் துன்பங்களை இன்முகத்தோடு சகித்துக் கொண்டு "எல்லாம் இறைவனது சித்தம்" என நினைத்து பக்தியநுபம் போல், இறையநுபவம் போல், நோயநுவத்தையும் மகிழ்ச்சியுடன் அநுபவித்த "ஆச்சரிய பூதன்' என்றும் சொல்லி வைக்கலாம். இஃது அவருடைய பிராரப்தம் - நுகர் வினையால் - விளைந்தது. என் இளமைகாலத்திலிருந்தே என்மீது பரிவும் பாசமும் காட்டிய பெருமகனார். அன்னவர் பிரிவு உற்றார் உறவினர் அடைந்த வருத்தத்தை விடச் சற்று அதிகமாக சீவோன் அடைந்ததை நினைவு கூர்கின்றேன்.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு

பிறப்பு 25.12.1908 சிவப்பேறு 191981

7. குறள் - 336