பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நீங்காத நினைவுகள்

நினைவு 6 : இரண்டாவது தாரமாக ஒரு பெண்ணை மணக்க வாய்ப்பு இருந்தும் பிள்ளைகளின் நலனுக்காக மாணி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்நாளைப் போக்கினார். இஃது ஓர் ஒப்பற்ற தியாகம் என்பதை உணர்ந்து பார்ப்போர் நன்கு அறிவர். நீதி மன்றங்களில் சாட்சிகள் நடந்து கொள்வதைப் பற்றி எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் தருவார். ஒரு சமயம் நான் துறையூர்ப் பணியிலி ருந்தபொழுது (1945 அதிகாலையில் தம் வீட்டிற்கு வருமாறு பணித்தார். நானும் அங்ங்னமே சென்றேன். நான் நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள ஒரு சிறு இல்லத்தில் குடியிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு ஃபர்லாங் போய் வரவேண்டும். என்னுடைய ஊர்தி மிதிவண்டிதான்; (ஓய்வு பெறும் வரையில் (1977 அதுதான் என் வாகனம். நான் சென்ற எதிர்கட்சிச் சாட்சியாகக் கூண்டில் ஏறுபவரிடம் அரங்கசாமி ரெட்டியார் பேசிக் கொண்டிருந்தார். இவர் என் இல்லத்திற்கருகிலுள்ள வக்கீல் அவதானி அய்யர் வழக்காடும் எதிர்கட்சியினரின் சாட்சி. இவருக்கு முதல்நாள் இரவு 7-8 மணிக்கு அடுத்த நாள் கூண்டில் சொல்ல வேண்டியவைபற்றிப் பாடம் சொல்லப் பெற்றவர். இவரை நோக்கி உங்கள் வக்கீல் உமக்கு நீர் நாளை சொல்ல வேண்டியவை பற்றி என்னென்ன சொல்லிக் கொடுத்தார்?" என்று கேட்க அவரும் அவற்றை விவரமாக ஒப்புவித்தார். "சரி, நீர் அப்படியே சொல்லிவிடும். நான் உம்மைக் குறுக்கு விசாரணை செய்யும்போது இன்னின்ன வினாக்கள் விடுப்பேன். அவற்றிற்கு இப்படிப் பதில் சொல்ல வேண்டும்" என்று பாடம் புகட்டினார் முதல் விசாரணையில் தரும் வாக்குமூலத்தைக் குறுக்கு விசாரணையில் உடைத்தெறிவதற்கு இத்திட்டம்

இங்ங்ணம் எதிர்க்கட்சியின் சாட்சியை இரகசியமாகக் கொண்டுவந்து நிறுத்தியது தம் கட்சிக்காரர். "பார்த்தாயா சுப்பு? இப்படித்தான் நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெறுகின்றன." என்றார். சாட்சி சொல்லுவதையே தொழிலாகக் கொண்டு பல சாட்சிகள் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உள்ளனர். ஒரு சமயம் என் பள்ளிக்கு உள்ளுர் மாவட்ட நீதிபதி (DistrictMunsit) ஓர் இலக்கியக்