பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நீங்காத நினைவுகள்

கொண்டிருந்தது. இதனைக் கேள்வியுற்றார் மாவட்ட நீதிபதி ஒருவர் (1950-51). இவர் வைணவப் பார்ப்பனர். போர்த்துறையிலிருந்து வந்தவர். இராமாநுசம் என்ற திருப்பெயரினர் என்பதாக நினைவு. நான் காரைக்குடியில் பணியேற்பதற்கு சில திங்களுக்கு முன்னர் (1950 ஜூலை தான் வந்தவராதலால் அதிகம் பழக வாய்ப்பு இல்லை. அரங்கசாமி ரெட்டியாரைப் பார்ப்பன விரோதி என்று தவறாகக் கருதிக் கொண்டு இவர் வாதிக்கும் வழக்குகளைக் கெடுக்கத் துணிந்தார். அந்தக் காலத்தில் சாட்சிகளின் விசாரணை தமிழில்தான் நடைபெறும். ஆனால் நீதிபதிகள் சாட்சிகள் கூறும் வாக்குமூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிவு செய்வதுதான் வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் தலைமை எழுத்தர் மூலம் ஆங்கிலத்தி லிருப்பதைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லி அது சரியாக இருந்ததாக எழுதிச் சாட்சிகளிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம். இப்படிச் செய்தால்தான் வாக்குமூலம் செல்லும். ஒரு சாட்சியின் வாக்குமூலத்தைச் சரியாக எழுதவில்லை என்பதைக் கண்டு கொண்டார் திரு. ரெட்டியார். சாட்சியிடம் "கையெழுத்துப் போடாதே" என்று சொல்லிவிட்டார். சாட்சியும் "நான் சொன்னபடி நீதிபதி பதியவில்லை. ஆகையால் கையெழுத்துப் போடேன்" என்று சொல்லிவிட்டார். இப்படித் தவறாக வாக்குமூலத்தைப் பதிவு செய்தோ அல்லது முக்கியமானவற்றை நீக்கிப் பதிவு செய்தோ வாக்கு மூலத்தைத் தயாரித்து விட்டால் இதைக் கொண்டு தீர்ப்பைப் பாதகமாகச் சொல்வது எளிது. முனிசீப்பு தான் இவ்வாறு பல வழக்குகளைக் கெடுத்தால், கட்சிக்காரர்கள் அரங்கசாமி ரெட்டியாரிடம் போகார், அவர் தொழில் பாதிக்கப்படும் என்று திட்டமிட்டதைக் கண்டு கொண்டதால் அரங்கசாமி ரெட்டியார் சாட்சி வாக்குமூலத்தில் கையெழுத்துப் போடாமலிருக்கத் திட்டமிட்டார்.

இந்த விஷயம்பற்றி நீதிமன்றத்தில் முனிசீப்பிற்கும் அரங்கசாமி ரெட்டியாருக்கும் பலத்த வாக்குவாதம் நடைபெற்றது. அரங்சாமி ரெட்டியார் நீதிபதி வாக்கு மூலத்தைச் சரியாகப் பதியாததைக் குறித்து வன்மையாக எதிர்த்துப் பேசினார். முனிசீப்பு சினங் கொண்டார். மதியை இழந்தார். அரங்கசாமி ரெட்டியாரை