பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நீங்காத நினைவுகள்

கலந்து கொண்டு எங்களை மகிழ்வித்துப் பெருமை படுத்தியவர் எம்ஏ வகுப்பு தொடங்கியபிறகு 1970-71 நடைபெற்ற "திருக்குறள்" பற்றிய முதற் கருத்தரங்கில் திரு அரங்கசாமி ரெட்டியார் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து ஆங்கிலத்தில் உரையாற்றி அனைவரையும் மகிழ்வித்தார். அந்தப்படம் இன்றளவும் பேரவை மண்டபத்தை (Senate Hall) அணி செய்து கொண்டுள்ளது. பின்னர்தான் வேமனர் படம் இதற்கு எதிர்வரிசையில் வைக்கப்பெற்றது திரு ரெட்டியாரின் ஆங்கில உரை கருத்தரங்கு மலரை அலங்கரித்துக் கொண்டுள்ளது.

நினைவு 15 : என் மணிவிழாவை நான் பிறந்த நட்சத்திரப்படி திருமலையில் ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் "அவன் கல்யான உற்சவமாக" என் மக்கள் கொண்டாடினர். ஆகஸ்டு 1976) இதற்கு வெளியூரிலிருந்து சிறப்பித்தவர் இவர் ஒருவரே. நான் யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை ரெட்டியார் கூட இருந்து வாழ்த்தியது எங்கட்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அடுத்து கல்லூரியில் தமிழ்த்துறையினரால் (என் செலவில்) மணிவிழா கொண்டாடப் பெற்றது திரு அனந்த சயனம் அய்யங்கார் அவர்கள் தலைமையில் இவ்விழாவிற்குப் பல்வேறு அன்பர்கள் - சமயத் தலைவர்கள், பல்கலைக் கழக மானிட ஆணையம் தலைவர், துணைத்தலைவர், துணை வேந்தர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், என்னுடைய ஆசிரியர்கள், உயர்நீதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், உயர்நிலைப் பள்ளியில் உடன் பணியாற்றிய தோழர்கள், நண்பர்கள் - நல்லெண்ணம் கொண்டவர்கள், திருவேங்கடவன் பல்கலைக் கழகப் பலதுறைப் பேராசிரியர்கள், பிற பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், என் பழைய - இன்றைய மாணவர்கள் ஆகியோர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் அடங்கிய மலர் ஒன்றும் வெளியிடப் பெற்றது. இவ்விழாவிற்கும் அரங்கசாமி ரெட்டியார் வந்திருந்து சிறப்பித்தார் என் சம்பந்திமார்கள் வருகை தந்திருந்தனர் மணிவிழா மலருக்கு திரு. ரெட்டியார் விடுத்த செய்தி