பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 49

சென்றபோது தான் கொண்டு வந்த சாமான்களை எடுத்துப் போனதுமன்றி தாம் இல்லாதபோது தாம் போட்ட நகை தாலிக்கொடி இவற்றையும் (சுமார் நாற்பது சவரன் மதிப்பு), வேறு பல சாமான்களையும் எடுத்துச் சென்று விட்டதாகவும். தாம் பல தடவை தம் இல்லத்திற்கு வந்து வாழுமாறும் நேரில் கேட்டும் கடிதம் எழுதியும் சில பெரியோர்களை அனுப்பி வருமாறு வேண்டியும் வராமல் அலட்சியம் செய்துவிட்டபடியால் இனி முதுமைக் காலத்தில் தாம் அவளுடன் வாழ விரும்பவில்லை என்றும். ஜீவனாம்சம் கோருவது நியாயம் அல்ல என்றும், அப்படி ஏதாவது வழக்கு தொடர்ந்தால் தக்க வக்கீலைக் கொண்டு எதிர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டிசைக் கண்டதும் அவர்கள் அடங்கிப் போனார்கள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

நினைவு - 13 : காரைக்குடியில் நான் பணியாற்றியபோது கல்லூரி மாணவர்கட்குக் குடிமைப் பயிற்சி முகாம்கள் அமைக்கப் பெற்றன. பத்து நாட்கள் இம்முகாம்கள் நடைபெறும், இளையாற்றங்குடி, பிள்ளையார்பட்டி, மாற்றுர், இராமேசுவரம், சூரைக்குடி என்ற இடங்களில் இம்முகாம்கள் நடைபெற்றன. இளையாற்றங்குடியில் முகாம் நடைபெற்றபோது அரங்கசாமி ரெட்டியாரைச் சிறப்பு விருந்தினராக" அழைத்தோம். அப்போது அவர் சட்டசபை உறுப்பினராகவும் இருந்தார் முகாமில் ஒரு போலி நாடாளுமன்றம்" (Mock Parliament) ஏற்படுத்தினோம். எல்லாப் பயிற்சி மாணாக்கர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரங்கசாமி ரெட்டியார் சபா நாயகர் (Speaker). இந்தமன்றத்தில் ஒரு சட்டமுன் வரைவு (Bill) எவ்வாறு கொண்டுவரப்பெற்று எவ்வாறு சட்டமாக்கப் பெறுகின்றது என்பது நன்கு விளக்கப் பெற்றது அரங்கசாமி ரெட்டியார் சபா நாயகராகப் பங்கேற்று சட்டம் ஆக்கப் பெறும் முறையை விளக்கினது இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது

நினைவு 14 : நான் திருப்பதியிலிருந்தபோது நான் முன்னின்று நடத்திய கருத்தரங்குகளிலெல்லாம் பார்வையாளராகக்

4.