பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 53

நினைவு - 17 ஆண்டு 1983 இந்த ஆண்டுத் தொடக்க காலத்தில் இரண்டு முறை சென்னை காஸ்மாபாலிடன் விடுதியில் சந்தித்ததாக நினைவு. உடல் நன்றாக இருந்ததாகத் தென்பட்டது. மனம் தெளிவாகப் பேசும் நிலையில் இல்லை. மூப்படைந்த நிலையில் (Serie) காணப் பெற்றது. சொன்னதையே பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லும் நிலையிலிருந்தார். "நீங்கள் இனி திருச்சியில் மகனுடன் இருப்பதுதான் உகந்தது" என்று யோசனை கூறிவந்தேன். அளவுக்கு மீறிய தொப்பை இருந்தது. காஸ்மா பாலி டன் விடுதிக்குள்ளேயே 4% - 5% மணிக்கு ஒரு மணிநேரம் நடக்குமாறு சொல்லி வந்தேன். அவர் அதைச் செய்யவில்லை.

அக்டோபர் வாக்கில் திருச்சி சென்று அங்கேயே தங்கிவிட்டதை அறிந்து மகிழ்ந்தேன். "இரண்டாவது குறுக்குத் தெருவில்" (தில்லை நகர் அதிகாலையில் ஒரு மணிநேரம் நடக்குமாறு கடிதம் எழுதினேன். இப்போது உடல் தளர்ச்சியும் இருந்ததாக அறிந்தேன். டிசம்பர் 3ம் நாள் திருநாடு அலங்கரித்த செய்தியை அறிந்தேன் (என் சம்பந்தி M.R. துரைசாமி ரெட்டியார் மூலம் உடனே கிளம்ப முடியவில்லை. அப்படிப் போய்தான் என்ன பயன்? ஆன்மா பிரிந்த திருமேனியைத் தானே பார்க்க முடியும்? இதை விரும்பவில்லை. 17, 18 நாட்களில் நெைபற்ற பூப்பந்தல், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன்.

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்தில் வுலகு" என்ற குறளுக்கு இதுகாறும் மறைந்த எல்லோர்போல் இவரும் ஓர் எடுத்துக்காட்டு போல் திகழ்கின்றார். நிலையாமையை நிலைத்து நின்று காட்டும் வள்ளுவப் பெருமானின் மணியான வாக்காகும் இது. பிறப்பு 109.1914 சிவப்பேறு 3.12.1983

6 குறள் - 336