பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நீங்காத நினைவுகள் நினைவு 3 : போர்த்துறையிலிருந்து விலகிய பிறகு டாக்டர் ரெட்டி சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்து நோயியல் துறையில் மூன்றாண்டுகள் பயின்று M.D (Pathology) பட்டம் பெற்றார். அக்கல்லூரியிலேயே மருத்துவமனை மருத்துவராகப் (Demonstrator) இரண்டாண்டுகள் பணியாற்றிய பின்னர் விசாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது குண்டூர் ஆந்திரம் மருத்துவப்பள்ளியில் முதல்வராகப் பணியேற்றார். அங்குப் பணியாற்றிய எட்டரையாண்டுக் 'காலத்தில் அரும்பாடுபட்டு அதனை M.D கற்பிக்கும் கல்லூரியாக, உயர்நிலை ஆய்வின் நிறுவனமாக வளர்த்துப் பெரும்பேர் பெற்றார். அவர் விசாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாண்டுகள் நோய் மருத்துவராகவும், பின்னர் அத்துறையின் இயக்குநராகவும் (Director) பணியாற்றும் வாய்ப்புகள் பெற்றார். பலநிலைகளில் இவருக்கு திரு K.M. இராவ் குடியரசுத் தலைவர் சர்வே பள்ளி இராதா கிருட்டிணனின் மருகர் அவர்களின் ஆதரவும் அரவணைப்பும் இருந்து வந்தது. இறைவனின் திருவுளக்குறிப்பே என்று கருதவேண்டும். - அரியவற்றுள் எல்லாம் அரிதே. பெரியாரைப் பேணித் தமராக் கொளல்" என்பது வள்ளுவர் வாக்கு பெரியவர்களைப் போற்றி அவர்களைத் தமக்கு உறவாகக் கொள்ளுதல் ஒருவர் பெறும் பேறுகளனைத்திலும் அரியதாகும் என்கின்றார். வள்ளுவர் பெருமான் எல்லோர்க்கும் இவ்வாய்ப்பு அமைவது இறைவன் திருவருளாலேயே என்று கருதுதல் வேண்டும். இவரது திறமையை நன்கறிந்த நடுவண் அரசு இவரை புதிதாகத் தொடங்கப்பெற்ற பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி முதல்வராக அமர்த்தியது. நடுவண் அரசின் நிதிமடை திறந்த வெள்ளமெனப் பாய்ந்தது. பணம் பத்துவிதம் செய்யுமல்லவா? இதனால் இந்நிறுவன வளர்ச்சி நாளொரு மேனியும் 6 குறள் - 443