பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 281 போர்த்துறையிலிருந்து திரும்பியதும் டாக்டர் ரெட்டியின் பெற்றோர்கள் இத்திருமணத்தை விரும்பவில்லை. அதனால் அவர்கள் மறையும் வரை சில ஆண்டுகள் மனைவியைப் பிரிந்த நிலையில் வாழ நேர்ந்தது. டாக்டர் ரெட்டியின் இல்லற வாழ்க்கையில் ஒரு கசப்பான பகுதியாகும் இது. பெற்றோர்கள் மறைந்த பிறகு டாக்டர் ரெட்டியின் இல்லற வாழ்க்கை மிகச் சிறப்புடன் நடைபெற்றது. காதற் பெண் மூலம் பல இலட்ச ரூபாய் வந்து சேர்ந்தது. இதனால்தான் இப்பெண்மணிக்கு "இலட்சுமி" என்று திருநாமம் சூட்டினார் போலும் இலட்சுமி D. ஜகந்நாத ரெட்டி மனைத்தக்க மாண்புடையவளாக அமைந்ததால் டாக்டர் ரெட்டியின் இல்லற வாழ்க்கை பலருக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்தது. திருப்பதியில் இவர்கள் இல்லற வாழ்க்கையை நான் நேரில் கண்டு மகிழ்ந்தவன். திருமதி இலட்சுமி தம் கணவன்மீது அளவற்ற பாசத்தையும் நேசத்தையும் காட்டி வந்ததையும், டாக்டர் ரெட்டியும் அவ்வாறே தன் துணைவியின்மீது காட்டி வந்ததையும் நேரில் கண்டு மகிழ்ந்தேன். செம்புலப் பெயநீர்போல, அன்புடை நெஞ்சங்கள் கலந்து வாழ்ந்ததைக் கண்டு களிப்பெய்தினேன். இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரென் கணவனை; யானாகியர்நின் நெஞ்சுநேர் பவளே என்ற அம்மூவனார் படைத்துக் காட்டும் தலைவிபோல் வாழ்ந்ததை நேரில் கண்டு மகிழ்ந்தேன். இவர்கட்கு இராமசந்திரரெட்டி என்ற ஒரே மகன் உண்டு. இவரும் சிறந்த மருத்துவர். இவருடைய துணைவியாரும் ஒரு மருத்துவ நிபுணர். இருவரும் பெரும்புகழ் பெற்ற சென்னை அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றியவண்ணம் புகழோங்கி நிற்கின்றார்கள். டாக்டர் ரெட்டி மறைந்த பிறகு திருமதி இலக்குமி ஜகந்நாத ரெட்டி தம் மகனுடன் வாழ்ந்து வருகின்றார்கள். 5 குறுந் 49 7