பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 நீங்காத நினைவுகள் தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்” கண்ணனைப் பெற்றதால் தாம் அடைந்த பயனைக் கவிஞர் கூறுவதுபோல் இவர்பணியாற்றிய ஒவ்வொரு நிறுவன்மும் தான் அடைந்த பயனைப் பறைசாற்றும். இவர் இப்போதைய செங்கற்பட்டு எம்.ஜி.ஆர். மாவட்டத்தில் திருத்தணி வட்டத்தில் வீரணல்லூர் என்ற ஓர் சிற்றுரில் தோன்றிப் பல இடங்களில் கல்விபெற்று 1941இல் சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். House surgeon ஆகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஆறுமாத காலத்தில் உலகப்போர் நடைபெற்ற சமயம் போர்த்துறையில் லெப்டினண்டாகப் பணியேற்றார். எட்டரையாண்டு போர்த்துறையில் பணியாற்றிய பின் பணியிலிருந்து விலகினார். நினைவு 2 : போர்த்துறையில் பணியாற்றி வந்த காலத்தில் அதே துறையில் பணியாளர் செவிலி (Staff nurse)யாகப் பணியாற்றிய ஒரு கிறித்தவப் பெண்மீது காதல் கொண்டு திருமணம் புரிந்து கொண்டார். இந்தக் காதல் மணம் நூறு விழுக்காடு வெற்றியைத் தந்தது. திருமணத்திற்குயின் இந்தப் பெண்மணி இந்துவாக மாறி கணவரால் இலட்சுமி என்று திருநாமம் சூட்டப் பெற்றார். ஒரு திருமணம் வெற்றியடைவது பெரும்பாலும் பெண்ணைப் பொறுத்தது. இதனால்தான் "பானை பிடித்தவள் பாக்கியம்' என்று அநுபவப் பழமொழியும் எழுந்தது. 3 கண்ணன் பாட்டு : கண்ணன் என் சேவகன் - 4 இவருடைய சகோதரர்களில் திரு. D. வேங்கட்டராடிரெட்டி என்பவர் இருப்பூர்தித் துறையில் பணியாற்றி உயர்நிலையில் ஓய்வு பெற்றவர். D. விசுவநாதரெட்டி வேளாண்மைத் துறையில் பணியாற்றி உயர்நிலையில் ஒய்வு பெற்றவர். டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி கடைக்குட்டி மு:ரும் பிறந்த குடும்பத்திற்கும் தாய்நாட்டிற்கும் "மும்மணிகளாகத்" திகழ்ந்தவர்கள்.