பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் 0. ஜகந்நாத ரெட்டி - 279 வைத்தவர் அக்காலத்தில் தமிழக ஆளுநராக இருந்த திரு KK ஷா என்பார். ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முன்னர் இவர் நடுவண் அரசு அமைச்சரவையில் நலவாழ்வுத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தவர். TheThinker என்ற சிலை டாக்டர் ரெட்டி தாமதமாக வந்து சேர்ந்த காரணத்தை நினைந்து பார்க்கும்படி தூண்டிக்கொண்டே உள்ளது நினைவு - 1 : இந்த ஜகந்நாதரெட்டி என்பவர் யார்? பாரதியார் பாட்டில் "கண்ணன் - என் சேவகன்" என்பதில், எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான் இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன் என்று பாரதியார் கண்ணனை அறிமுகம் செய்துவைப்பார். அதுபோல டாக்டர் ரெட்டியை இவர் பணியாற்றிய ஒவ்வொரு நிறுவனமும் அறிமுகம் செய்து வைக்கும். மேலும், கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவும் அவன்பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர்.சிறப்பு நற்கீர்த்தி கல்வி அறிவு கவிதை சிவயோகம் 2 இவர் சிறந்த அரசியல்வாதி. கலைஞர் ஆட்சிக்காலத்தில் இருந்தவர். பொதுக்கூட்டங்களில் தம்மைக் கலைஞர் கருணாநிதி ஷா என்று சொல்லிக் கூட்டத்திலுள்ளோர் மகிழும்படி செய்பவர். செட்டி நாட்டரசரின் துணைகொண்டு தமிழ் - சமஸ்கிருத ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கியவர். இது சில ஆண்டுகள் இயங்கியது: இப்போது இது மூடப் பெற்றது. பச்சோந்தித்தனம் இவரிடம் நிறைய உண்டு.