பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17|| துணைவேந்தர் டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி "நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்அடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்துகி டப்பதே" என்ற நாவுக்கரசப் பெருமானின் திருமொழி நினைவில் எழ, டாக்டர் D. ஜகந்நாத ரெட்டியின் பணியின் நினைவுகள் நீங்காத நினைவுகளாக ஈண்டு இடம் பெறுகின்றன. டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி திருவேங்கடவன் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவி ஏற்றது 1969 செப்டம்பர் என்பதாக என் நினைவு. இரண்டு மூன்று திங்கள்கட்கு முன்பதாக வந்திருக்க வேண்டியவர் ஏன் தாமதமாக வந்து சேர்ந்தார்? காரணம் என்ன? என் அரிய நண்பர் ஜஸ்டிஸ் மகராஜன் ஒரு சமயம் உரையாடிக் கொண்டிருந்தபோது "உங்கள் துணைவேந்தர் உரிய காலத்தில் வந்து பணியை ஏற்றுக் கொண்டாரா?" என்று வினவினார். "இல்லை. இரண்டு மூன்று திங்கள் தாமதமாகவே வந்து சேர்ந்தார்" என்றேன். ஏதோ தகுந்த காரணம் சொன்னார். அதனை ஈண்டு வெளியிடப் போவதில்லை; எப்பொழுதுமே வெளியிடப் போவதில்லை. டாக்டர் ரெட்டி காலத்தில் துறைகளிலிருந்து பல்கலைக்கழக அலுவலகத்திற்குப் போகும் சாலை தொடங்கும் இடத்தில் The Thinker என்ற அரியதோர் சிலை நிறுவப் பெற்றது. இதனைத் திறந்து 1 அப்பர் தேவாரம் 519 9