பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி - 277 என்ற பாடல்மூலம் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இந்த நூலுக்கு இந்து நாளிதழ் செப்டம்பர் 24, 1989 சிறந்ததொரு மதிப்புரை வழங்கியுள்ளது. இந்த நூலின் படி ஒன்றை டாக்டர் சஞ்சீவியின் திருக்கைகளில் சேர்வதற்கு முன்னர் அவர் இறைவன் திருவடி நிழலை அடைந்துவிட்டார். அவருடைய நெருங்கிய நண்பரும் கிறித்தவத் துறைப் பேராசிரியருமான டாக்டர் இன்னாசி அவர்களின் மூலம் அவர் அருமை மகள் கையில் சேர்ப்பிக்கப்பெற்றது. டாக்டர் சஞ்சீவி நீரிழிவு நோயாலும் குருதியமுகத்தாலும் தொல்லைப் பட்டார். மிக்கக் கட்டுப்பாடுடன் உடலைப் போற்றினார். விதி யாரை விட்டது? நுகர்வினை (பிராரத்தம் முடிவுற்றது. இயற்கையுடன் கலந்து விட்டார். இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை" பிறப்பு: 25.1927 சிவப்பேறு : 22.8.1988 16 சிலம்பு - வஞ்சிக் - நடுகல் - அடி 181-82.