பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நீங்காத நினைவுகள் நினைவு 13 தாம் நிறுவிய அறக்கட்டளையின் ஆதரவில் 1986-87க்குள்ள பொழிவுகளை நான் நிகழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டார் அழைப்பும் அனுப்ப ஏற்பாடு செய்தார். பேசும் தலைப்பைப் பற்றிக் கேட்டதற்கு "தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை" என்ற தலைப்பும் தந்தார். டாக்டர் சஞ்சீவி எதனையும் சிந்தித்துச் செயற்படுவதில் தனித்திறம் பெற்றவர். இதனால் இவரைச் “சிந்தனைச் செல்வர்" என்றே அழைப்பர் இவருடைய நெருங்கிய நண்பர்கள். என்னைத் தேர்ந்ததெடுத்தற்கு 'அன்பு ஒரு காரணமாக இருந்தாலும், "நான் எதனையும் திருத்தமுறச் செய்வேன். பொழிவுகளையும் நூல்வடிமாக்குவேன்" என்ற நம்பிக்கையும் என்பால் கொண்டிருந்தது மற்றொரு காரணமுமாகும். அவர் கருத்துப்படியே மார்ச்சு 28,29,30 1988 நாட்களில் மேற்படி தலைப்பில் மூன்று பொழிவுகள் நிகழ்த்தினேன். மிகக் கடினமாக உழைத்துத் தயார் செய்த பொழிவுகளாகும் இவை. இந்தப் பொழிவுகளும் இதே தலைப்பில் தேன் மழைப் பதிப்பாக வெளியீடாக திசம்பர். 1988) வெளிவந்தது. இதற்கு தில்லி உச்சநீதிமன்றம். நீதிபதி ஜஸ்டிஸ் எஸ். நடராசன் அரியதோர் அணிந்துரை அருளிச் சிறப்பித்துள்ளார். இந்த நூலை தில்லிப் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும், பீகார் மாநில முன்னாள் ஆளுநரும் திருவேங்கடவனுக்கு அடிமையும் வைகுந்த வாசியுமாகிய திருமாடபூசி அனந்தசயனம் அய்யங்கார் அவர்கட்கு திவ்விய மான வேங்கடத் தப்பன் திருவடி மலர்திரு வுளத்தன், கவ்வைசேர் மக்கள் உயர்வுற உழைத்த கண்ணியன் காந்தியின் தொண்டன்: அவ்வியம் அறியாச் சால்பினன்; என்னை அன்பினால் பண்பினால் பிணித்தோன் செவ்விய அனந்த சயனமைய் யங்கார் சேவடிக் குரியதிந் நூலே.