பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி - 275 ஒருவரது இன்றைய வாழ்க்கையில் மகள் திருமணம் ஆகி கணவனது வீட்டிற்குச் சென்று விடுவாள். மகனோ திருமணம் ஆகி உத்தியோகத்தின் நிமித்தம் வேற்றுரே வேறுநாடோ சென்று விட வாய்ப்புகள் உண்டு. ஆனால் இறுதிவரையிலும் கணவனை விட்டுப் பிரியாமல் இருப்பவள் மனைவியே. இதனை நன்கு உணர்ந்தே நீதிவெண்பா ஆசிரியர், மாதா மரிக்கில் மகன்நாவில் நல்சுவைபோம்: தாதா வெனில்கல்வி தான்அகலும் ஒதின்உடன் வந்தோன் மரித்துவிடில் வாகுவலிபோம்; மனையேல் அந்தோ இவையாவும் போம்" என்று ஓதினார். மனைவி ஒரு குடும்பத்தின் பலதுறைகளையும் ஏற்றுப் பொறுப்புடன் செய்யும் நீரள் ஆதலின் அவளோடு அனைத்தும் போம் என்றார். அந்தோ என்பதில் இரக்கம், பரிதாபம், பச்சாதாபம், ஏக்கம் முதலிய அனைத்து பாவனைகளும் கலந்து வெளிப்படுகின்றன. பாவேந்தர் தம் "குடும்ப விளக்கில்" முதியோர் காதலில் கணவன் இருக்கின்றாள்" என்று சொல்லி மகிழ்கின்றதையும் நினைந்து பார்க்கலாம். திருமதி கிருஷ்ணா சஞ்சீவி மறைந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்று கேதம் விசாரிக்கச் சென்றிருந்தேன். டாக்டர் சஞ்சீவி என் கையைப் பிடித்து இட்டுக் கொண்டு சென்று துணைவியாரின் திருமேனியைக் காட்டினார். துக்கம் மனத்தை அடைத்தது. கைகளைப் பிசைத்து கொண்டோமேயன்றி பேச்சு எழவில்லை. சுடுகாடு வரை சென்று இறுதிச் சடங்குகள்வரை கலந்து கொண்டு திரும்பினேன். பின்னர் தம் சொந்த சேமிப்பிலிருந்து தமிழகப் பல்கலைக் கழகங்களில் பல்,அறக்கட்டளைகளை வைக்கும்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் தம் அன்ன்ையார் - துணைவியார் இருவர் பெயரிலும் "டாக்டர் திருமதி கிருஷ்ணா சஞ்சீவி - திருமதி கண்ணம்மாள் நடேசன் அறக்கட்டளை" என்று நிறுவி இருவருக்கும் நினைவுச் சின்னம் ஏற்படுத்தி மனநிறைவு பெற்றார். 15 நீதி வெண்பா - 61 - -