பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 நீங்காத நினைவுகள் காலத்தில் வெவ்வேறு தலைப்புகளில் எழுதிய 16 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளார்." "டாக்டர் ரெட்டியார் சைவம் வைணவம் இரண்டையும் தமது இருகண்களாகப் போற்றுபவர் என்பதும் தமிழிலக்கியத்தின் பல்வேறு காலத்து நூல்களிலும் உரைகளிலும் ஆழ்ந்த புலமையுடையவர் என்பதும் அவர்தம் இந்நூலாலும் உறுதி பெறும்." "டாக்டர் ரெட்டியார் அவர்கள் தம் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெற்றவர் அல்லர். இவருக்குத் தமிழக அரசு "திரு.வி.க. இலக்கியப் பரிசும்" இந்திய அரசு "பத்மபூரீ பட்டமும் வழங்கி சிறப்பித்தல் தகும்" . - நினைவு 12 : இவர்தம் வாழ்க்கையில் பெற்ற பேரிடி மனைவியை இழந்தது. தம் மகள், தம்மைக் கலக்காமல் காதல் மணம் செய்து கொண்டதால் மனம் உடைந்து உடல்நிலை குன்றி இறந்தார் என்று சொல்லப்படுகின்றது. இஃது உண்மைக் காரணமாக இருந்தால் இந்த அம்மையார் டாக்டர் சஞ்சீவியைக் கைபிடித்தது காதல் - கலப்பு மணந்தானே? இவர்தம் பெற்றோரைக் கலந்தா காதல் மணம் புரிந்து கொண்டார்? முதுகலைப் பட்டம், டாக்டர் பட்டம் பெற்று, பல பெண்களுக்குக் கற்பிக்கும் அநுபவம் பெற்றவர்கள், மகளிரின் மனநிலைகளை நன்கு அறிந்தவர்கள் ஆகியோருக்கு மனப்பக்குவம் ஏற்படவில்லை என்று கருதுவது தவறு. ஆயினும் எவ்வளவு கற்றாலும் "உண்மை அறிவே மிகும்" என்ற உண்மையையும் புறக்கணிப்பதற்கில்லை. இதைப்பற்றி ஆய்ந்தும் பயன் இல்லை. ஆனால் டாக்டர் சஞ்சீவியின் மனம் மலை கலங்கினும் நிலை கலங்காத் தன்மையுடையது. தம் அருமை மகளின் செயல் இவர் மனத்தை அதிகம் பாதித்திருகக முடியாது. 14 இவர்தம் தூய உள்ளத்தில் எழுந்த எண்ணத்தால் திரு.வி.க. இலக்கியப்பரிசு 1990இல் கிடைத்தது. இதனைக் காண இவர் அன்று இல்லை. நடுவண் அரசு வழங்கும் விருது ஏழுமலையான் அருளால்தான் வரவேண்டும். அதுவரையில் அடியேன் பூதஉடம்பு நிலைபெற்றிருப்பதும் அவனது திருவருள்.