பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. ಹ@ಕೆ 273 என்றபோக்கில்தான் கையொலி எழுப்புவதாகத் தெரிந்தது என்று கூறியவர். "பேட்டியில் தங்களிடம் இவ்வினா விடுக்கப் பெற்றதா? என்றும் கேட்டார். ஆம்' என்பதாக ஒப்புக் கொண்டேன். இந்த செய்தி என் மனத்தை நெருடிக்கொண்டே இருந்தது. திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை வெள்ளிவிழா ஆண்டில் அதன் நினைவாக ஒரு சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பு 1985 வந்தது. அதில் "சைவம் வைணவம் ஒப்பீடு" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினேன். அதனைக்கட்டுரையாகவும் வரைந்து வைத்திருந்தேன். "ஆன்மிகமும் அறிவியலும்" என்ற கட்டுரையுடன் வேறு பதினான்கு கட்டுரைகளையும் "சைவம் வைணவம் ஒப்பீடு" என்ற கட்டுரையையும் சேர்த்து பதினாறு கட்டுரைகள் அடங்கிய "ஆன்மிகமும் அறிவியலும்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டேன். வேண்டும்ென்றே டாக்டர் சஞ்சீவியின் கவனத்திற்கு இக்கட்டுரை வரவேண்டுமென்றே அவரிடம் இந்நூலுக்கு அணிந்துரை” கேட்டேன். அவரும் "பணிவுரை ஒன்று நல்கினார். அதில், "டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்களைத் தமிழுலகு நன்கறியும். கடந்த நாற்பதாண்டுகளாக இடையீடின்றி அறிவுப் பணியும் அருந்தமிழ்ப்பணியும் செய்துவரும் சான்றோர் அவர். அறிவியல், சமயம், இலக்கியம் - கல்வியல், உளவியல் ஆகிய துறைகளில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நூல்களை எழுதிப் பரிசுகளும் பாராட்டுகளும் பல பலவாகப் பெற்ற பெரியவர் அவர் இவ்வகையில் இவருக்கு நிகர் இவரே எனலாம். உபநிலைப் - பள்ளியில் தொடங்கிய அவர்தம் கல்வி வாழ்க்கை தமிழகத்தின் வடவெல்லையில் உயர் கல்வித் துறையிலும் ஒளி வீசியது தமிழர் பெருமைப்படுவதற்கும் உரியதாகும், சலியாத உழைப்பே டாக்டர் சுப்புரெட்டியாரின் சாதனைகட்கெல்லாம் அடிப்படை' டாக்டர் ரெட்டியார் அவர்கள் தமது பணி ஓய்வுக் காலத்திலும் ஓயாமல் உழைப்பது போற்றிப் பின்பற்றக் கூடியது. "ஆன்மிகமும் அறிவியலும் என்ற தலைப்பில் டாக்டர் ரெட்டியார் வெவ்வேறு