பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நீங்காத நினைவுகள் அப்பப்ப நினைக்க நினைக்க டாக்டர் சுப்பு ரெட்டியாரைப் போல் பிறப்பது அரிது. பெரிது என்றே எண்ணத் தோன்றுகின்றது. எவர்க்கும் இனியராய், உழைப்பின் உருவமாய் விளங்கும் பேராசிரியர் ரெட்டியார் விரும்பும் காலம் எல்லாம் வாழ்ந்து வேண்டும் பணிகளெல்லாம் புரிய மாமனாரும் மருமகனும் ஒருங்கிணைந்து திருவருள் புரிவார்களாக" இதனால் டாக்டர் சஞ்சீவி என்னை எப்படி எப்படி யெல்லாம் எடைபோட்டிருந்தார் என்பது தெளிவாகின்றது. - - நினைவு 11 : 1976இல் பேராசிரியர் நியமனக் குழுவில் இருந்த டாக்டர் சஞ்சீவி எனக்கு விடுத்த வினாக்களுள் ஒன்று "டாக்டர் ரெட்டியார். நீங்கள் சமயங்களைப் பற்றி ஆராய்ந்திருக்கின்றீர்கள். சைவத்திற்கும் வைணவத்திற்கும் உள்ள வேறுபாடுகள் எவை எனக் காட்ட முடியுமா?" என்பது நினைவு - 9. நான் அதற்குப் பெரும்பாலும் கொள்கைகளின் பெயர்களில் வேறுபாடுகள் இருப்பனபோல் தோன்றும் தத்துவக் கண்ணால் நோக்கினால் உண்மையில் வேறுபாடுகள் இல்லை" என்று விடையிறுத்தேன். பேராசிரியர் கே. சச்சிதானந்த மூர்த்தி துணை வேந்தர் ஒரு தத்துவப் பேராசிரியரானதால் அவருக்கு முன்பாக இவ்வினா விடுக்கப் பெற்றதாக எனக்குப் பட்டது. சில திங்கட்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற ஏதோ ஒரு கூட்டத்தில் பேசும்போது டாக்டர் சஞ்சீவி "நான் ஒரு பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியரை சைவத்திற்கும் வைணவத்திற்கும் வேறுபாடு என்ன? என்று கேட்டதற்கு அவர் வேறுபாடு ஒன்றும் இல்லை என்று கூறினார்" என்று அவிழ்த்துவிட கூட்டத்தி லிருந்தவர்கள் அனைவரும் கையொலி எழுப்பினார்களாம். வினாவின் பொருள்தவிர அதன் தொனி, விடுத்தவரின் முகபாவனை இவற்றையெல்லாம் நேரில் பார்த்தவர்கள்தாம் உண்ழையை உணரமுடியும். ஆனால் இக்கூட்டத்திற்குச் சென்றிருந்த டாக்டர் சி.பா. விடுத்த வினாவிற்கு இறுத்த விடை தவறுடையது 13 மணிவிழா மலர் 1977 பக், 62-63