பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி - 271 பேராசிரியர் சுப்பு ரெட்டியார் உலகியல் நன்கு உணர்ந்தவர். ஊசி நுழையாத இடத்திலும் அவர் நுழைவார். பகைச்சுவை அறியாத நகைச்சுவைப் பண்பாளராகிய அப்பெருமானால் போதிக்க - வேதிக்க - சாதிக்க முடியாதது ஒன்று உண்டோ? அவரிடம் இல்லாத செல்வம் இல்லை. அறிவுச் செல்வம், உழைப்புச் செல்வம், அருட்செல்வம் எல்லாம் அவரிடம் அள்ள அள்ளக் குறையாமல் உண்டு சிக்கனச் செல்வமும் சீராக உண்டு மதிப்பெண்கள் தருவதில் மட்டும் இந்தச் சிக்கனம் இம்மியும் இராது பேராசிரியர் ரெட்டியார் - ஊழையும் கூழாக்கும் உரவோர். அவர் படித்த அறிவியல் படிப்பும், பயிற்சிக் கல்லூரிப் பட்டறிவும் தமிழ் பெற்ற பேறாயின. எந்த ஊழ்வினையும், சூழ்வினையும் அவரை ஏதும் செய்ய இயலாது நாய்கள் குரைத்தாலும் ஒட்டகம் நகர்ந்து கொண்டே இருக்கும்! பேராசிரியர் ரெட்டியார் நன்றி உணர்வு நிறைந்தவர் நடுநிலை பிறழாதவர். பிறழ்ந்தாலும் கனவாலும் பிறர்க்குத் தீமை புரியாக் கருணைக் கடல். திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையை அவர் உருவாக்கியிருக்கும் - திருவாக்கியிருக்கம் - உரன், திறன் - வியந்து வியந்து மகிழ்ந்து மகிழ்ந்து போற்றுதற்குரியது. பேராசிரியர் ரெட்டியார் கள்ளங்கபடமற்றவர். நாய் வாயில் கோல் கொடுக்கார் - அதன் வாலை நேராக்க முயலுதலும் முட்டாளின் வேலை என்பதை முழுதாக நன்குணர்ந்து பயனுடைய வேலையைப் பார்ப்பார். - பேராசிரியர் ரெட்டியார் சாலை வீடே வேண்டும் என்று சதிகள் செய்யார். சந்து, பொந்து வீடாயினும் சானைப் பிடிக்கும் வேலையில் சளைக்கார். சுருங்கச் சொன்னால் பேராசிரியர் சுப்புரெட்டியார் நல்லதந்திரர் யந்திரர், பேராசிரியர் ரெட்டியாரின் மனைவியும் மக்களும் அவர் மனதிற்கு ஏற்ற மாண்பினர்.