பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 - - நீங்காத நினைவுகள் உயரத்திலிருக்கிறார் என்று சொன்னீர்களாமே" என்று கேட்டாராம் அதற்கு டாக்டர் சஞ்சீவியும் "உண்மையைத்தான் சொன்னேன். உங்கள் நெஞ்சில் நீங்களே கையை வைத்துப் பாருங்கள்" என்று சொன்னாராம். இப்போது இதனை எண்ணிப் பார்க்குங்கால் என்னுடைய பேராசிரியப் பெருந்தகையே சஞ்சீவி வடிவில் வந்து எனக்கு ஆசி கூறியதாக நினைக்கத் தோன்றுகின்றது. பதினாறு ஆண்டுகள் ஓடிவிட்டன. மனமும் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மனம் இரு வினையொப்பைச் சிந்திக்கின்றது. அதில் ஆழங்கால் படுகின்றது. முப்பதுசென் றால்விடிவும் முப்பதுசென் றாலிருளும் அப்படியே ஏதும் அறிநெஞ்சே - எப்பொழுதும் ஆங்கால் எவ்வினையும் ஆகம் அதுதொலைந்து போங்காலும் எவ்வினையும் போம்: என்ற பொன்மொழியை எண்ணுகின்றது. வவ்விப் பொருகுவதும் புழுங்குவதும் வேண்டா வருகுவதும் தானே வரும்" என்ற உண்மையிலும் மனம் தோய்ந்து விடுகின்றது. + நினைவு 10 1977 செப்டம்பர் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் ஆதரவில் என் மணிவிழா கொண்டாடப் பெற்றது. அதன் நினைவாக பல பெரியார்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் அடங்கிய மலர் ஒன்றும் வெளியிடப் பெற்றது. டாக்டர் சஞ்சீவி அனுப்பிய வாழ்த்துச் செய்தி. "பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் முப்பால் பெரியார்: அறம் பொருள், இன்பம் மூன்றுக்கும் உரியார். so பேராசிரியர் சுப்பு ரெட்டியார் மணிவிழாக் கண்ட மணவாளர். இப்போதும் அவர் சிரிப்பதே - இல்லை - முறுவலிப்பதைப் பார்த்தால் எந்த ஆணும் கொஞ்சம் மயங்கவே செய்வார். 11 சிவபோக சாரம் - 79 12 மேலது - 79