பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி 269 பெற்றது. விளம்பரம் செய்யப் பெற்றதே எனக்குக் கிடைப்பதற்கான அறிகுறி என்று எல்லோர் கருத்திலும் பட்டது. நானும், டாக்டர் .ே தாமோதரனுமே இதற்கு விண்ணப்பம் செய்திருந்தோம். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவியும், மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் முத்து சண்முகமும் நியமன நிபுணர்க்குழுவில் இடம் பெற்றிருந்தனர். பேட்டியும் முடிந்தது. குழு கலந்தாயும்போது கடுமையான வாதங்கள் இருந்தனவாம். டாக்டர் சஞ்சீவி, "நானும் டாக்டர் ரெட்டியாரும் அப்போது இருவருக்குமே டாக்டர் பட்டம் இல்லை 1960-இல் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தோம். டாக்டர் ரெட்டியார் என்னைவிட அநுபவம் மிக்கவராகவும், பலதரமான நூல்களின் ஆசிரியராகவும் இருந்தார்; வயதிலும் முதிர்ந்தவராக இருந்தார். தவிர அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர் (professor) பதவியிலும் இருந்தார். இத்தகுதிகள் எல்லாம் இல்லாதிருந்தும் அவருக்குப் போகவேண்டிய பதவி என்தலையில் விழுந்தது. அன்று அவர் தலையில் விழுந்திருந்தால் இப்போது நான் இருக்கும் நிலையில் (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராகவும் இந்த நியமனக்குழு உறுப்பினராகவும் அவர் இருப்பார். இப்போது டாக்டர் G. தாமோதரன் தகுதிகளையும் டாக்டர் ரெட்டியாரின் தகுதிகளையும் ஒப்பிடுங்கால் சம்பந்தா சம்பந்தமே இல்லை. டாக்டர் ரெட்டியார் எங்கே? டாக்டர் தாமோதரன் எங்கே? உழைப்பிலாவது ஒப்பீடு உண்டா? இல்லவே இல்லை என்பதும் தெளிவு. டாக்டர் ரெட்டியாரின் நூல்களே அவருக்குப் பரிந்துரைகளாக இருக்கும். ஆதலால் இப்பதவி டாக்டர் ரெட்டியாருக்குத்தான் போகவேண்டும்" என்று மிக உருக்கமாக வாதித்து என்னை நியமிக்கவேண்டும் என்ற தீர்மானத்திலும் கையெழுத்திட்டாராம். இச்செய்தி எப்படியோ டாக்டர் தாமோதரன் காதுக்கு உடனே எட்டியது. . டாக்டர் தாமோதரன் இருப்பூர்தி நிலையம் சென்று பலர் இருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாமல் என்ன சார் எனக்கும் ரெட்டியாருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அவர் மிக