பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 . நீங்காத நினைவுகள் நடைபெறுவதில்லை. எப்பொழுது வந்தாலும் குடும்பத்துடன்தான் வருவார். நினைவு 8 : திருமதி இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் 25.5.1975 அவசரகாலநிலை பிறட்பிக்கப்பெற்றது. இதுநாட்டின் ஒழுங்குமுறை சீர்படுவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம். இதனைப் பல்வேறு துறைகளில் மேல்மட்டத்தில் பணியாற்றிய பல கயவர்கள் இந்தத் திட்டத்தையே குலைத்து அந்த அம்மையாருக்கு அழியாப் பழியைத் தேடித் தந்தனர். அவசரகால நிலையில் கயவர்களின் கைங்கரியத்திற்குப் பலியாகிச் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த நல்லவர்களில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவியும், சென்னை மாநிலக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மெ. சுந்தரமும் அடங்குவர். அவசர காலத்தில் "புறங்கூறுதல்" உச்சநிலையில் செயல்பட்டது. இதன் விளைவால் ஏற்பட்ட விபரீதச் செயல்கள் கணக்கிலடங்கா, X- - தவிர, டாக்டர் மெ. சுந்தரத்திற்கும் டாக்டர் ந. சஞ்சீவிக்கும் கருத்து மாறுபாடுகள். இருவரும் "கீரியும் பாம்புமாகப் பழகினர். டாக்டர் சஞ்சீவி தமக்கு வந்த பல மொட்டைக் கடிதங்களை என்னிடம் காட்டி இவையனைத்தும் மெகவின் திருவிளையாடல்களே. என்று பழி சுமத்துவார். அப்போது தமிழ்ப் பேராசிரியர்களின் மனப் - போக்குகளை நினைத்து நாணித்தலை குனிவேன். மிகவும் வருந்துவேன். இருவருமே தொடக்க காலத்திலிருந்தே அரசியலில் அவரவர் மனப்போக்குப்படி நேர்த்தொடர்பு கொண்டிருந்தது பெருந்தவறு. இவர்கள் இருவருமே இதைத் தவிர்த்திருக்கலாம்." நினைவு - 9 : சுமார் ஆறாண்டுகளாகத் (1969 - 75 தேக்கிவைக்கப்பெற்றிருந்த என் பதவி உயர்வு பேராசிரியர் பதவி துணைவேந்தர் கே. சச்சிதாநந்தமூர்த்தி காலத்தில் எனக்குக் கிடைக்கக் கூடிய ஊழ் ஏற்பட்டது. பதவி விளம்பரப்படுத்தப் 10 இதை எழுதும்போது இன்று ஜூன் 1998 இருவருமே இல்லை