பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி - 267 நூலில் இடம் பெற்றுள்ளன. கட்டுரை அச்சேறும்போது தட்டச்சுப் படிவத்துடன் கைப்படியை ஒப்புநோக்கிப் பார்க்கப்பெறாததால் சொற்கள், சொற்றொடர்கள், சில இடங்களில் வாக்கியங்கள், விடுபட்டு "பிழை மலிந்த சருக்கமாகத்" தோற்றமளிக்கின்றது. பல்கலைக்கழக வெளியீடு இப்படி வெளிவருவது அங்குப் பணியாற்றும் ஆசிரியர்களின் பொறுப்பின்மையைக் காட்டுவதாக அமைகின்றது. 12 1973 நவம்பரில் டாக்டர் H.P சேதுப்பிள்ளை வெள்ளி விழா அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்" நிகழ்த்துமாறு டாக்டர் ந. சஞ்சீவி ஏற்பாடு செய்தார். அடியேன்.திருப்பதியில் பணியாற்றியதால் "திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்" என்ற தலைப்பில் மூன்று பொழிவுகள் நிகழ்த்துமாறு பணித்தார் டாக்டர் சஞ்சீவி. அடியேனும் (1 சங்ககால வேங்கடம் 2 இடைக்கால இலக்கியத்தில் வேங்கடம் 3. திருவேங்கடத்தின்மீது எழுந்துள் நூல்கள் என்ற தலைப்புகளில் பொழிவுகள் நிகழ்த்தினேன் (பிப்பிரவரி 28, மார்ச்சு 1, 2 - 1974). பல்கலைக்கழக இசைவு பெற்று பொழிவுகள் "திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்" என்ற தலைப்பில் பாரி நிலையத்தார் வெளியிட்டனர். இந்த நூலுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாமரைச் செல்வர் நெது. சுந்தரவடிவேலு அரியதோர் அணிந்துரை நல்கியுள்ளார். நூலை அக்காலத்தில் தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 52-வது பிறந்தநாள் விழாவின் நினைவாக, பொற்புறு தமிழ்த்தாய் மலரடி பிணித்த புல்லிய விலங்கினைத் தகர்த்து நற்புகழ்த் தமிழர் இதயமாம் அணையில் நாவலர் போற்றிட அமர்த்திச் சிற்பவண் குறளாம் ஆணை யெப்புறத்தும் திகழ்ந்திடத் தமிழ்ப்பணி புரியும் அற்புதக் கருணா நிதியெனும் தலைவர் அன்பினுக் குரியதிந் நூலே. என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். டாக்டர் ந. சஞ்சீவி இல்லாமல் திருப்பதியில் எந்தக் கருத்தரங்கும்