பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 நீங்காத நினைவுகள் மூர்த்தியின் தலைமையில் நடைபெற்றது. ஆந்திர மாநில முன்னாள் தலைமையமைச்சரும், உத்திரப் பிரதேச முன்னாள் ஆளுநரும், நெல்லூரில் வாழ்ந்து வருபவருமான திரு. 8. கோபால ரெட்டி மாநாட்டைத் திறந்துவைத்தார். கம்பனில் திளைத்து ஆங்கிலத்திலும் கம்பனைக் காட்டும் ஓய்வு பெற்ற ஜஸ்டிஸ் S. மகாராஜன் சட்டஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்) தொடக்க விழாவில் அடிப்படைக் கருத்தமையும் பாங்கில் (Keynote address) சொற்பொழிவை நிகழ்த்தினார். இலக்கிய வரலாற்று அறிஞர் மு. அருணாசலம் கம்பன் படத்தைத் திறந்து வைத்தார். கம்பன் அடிப்பொடிக்கு தொடக்க விழாவில் தமிழில் வரவேற்புக் கவிதை மடலும் திரு. 8. கோபால் ரெட்டிக்குத் தெலுங்கில் வரவேற்புக் கவிதை மடலும் படித்தளிக்கப்பெற்றன. கம்பன் அடிப்பொடி ஓர் அமர்வுக்குத் தலைமை வகித்தார். டாக்டர் சஞ்சீவி ஓர் அமர்வுக்குத் தலைமை வகித்து ஓர் ஆய்வுக் கட்டுரையையும் படித்தார். கம்பனடிப்பொடி இல்லாத ஒரு கம்பராமாயணக் கருத்தரங்கும். டாக்டர் சஞ்சீவி இல்லாத ஒரு பல்கலைக் கழக கருத்தரங்கும் பருப்பு இல்லாத கல்யாணம் போன்றதல்லவா? எல்லா அமர்வுகளிலும் 20 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப் பெற்றன. நினைவு - 7 : சென்னைப் பல்கலைக்கழகத்தில் 22:173 முதல் 31173 வரை நடைபெற்ற "தெய்வத்தமிழ்" கருத்தரங்கில் பத்தாம்நாள் "வைணவ சமய நூல்கள்" என்ற தலைப்பில் ஜஸ்டிஸ் N. கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் பேச வாய்ப்பு தந்தார் டாக்டர் சஞ்சீவி. ஆய்வுக் கட்டுரையும் தரப் பெற்றது. இக்கட்டுரையில் 1 விரிவஞ்சி நூலாசிரியரின் காலம் விரிவாக ஆராயப் பெறவில்லை. கால எல்லை மட்டிலுமே குறிப்பிடப் பெற்றுள்ளது 2 நூல்களும் விரிவான திறனாய்வுக்கு உட்படுத்தப் பெறவில்லை. குறிப்பாக அவற்றின் சில சிறப்பியல்புகள் மட்டிலுமே சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன. பேச்சின் இறுதியில் தமிழ்த்துறையினரும், அவையோரும் எழுப்பின வினாக்களுக்கு விடைகள் தரப்பெற்றன. ஆய்வுக் கட்டுரையும், வினாக்களும் விடைகளும் அச்சு வடிவம் பெற்று "தெய்வத்தமிழ்" என்ற