பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி 265 3. இந்தி பேரா. S. சங்கரராஜ நாயுடு (சென்னை 4. வடம்ொழி டாக்டர் W. வரதாச்சாரி திருப்பதி) 5. ஆங்கிலம் S. விசவநாதன் திருப்பதி" இந்தக் கட்டுரைகள் யாவும் எழுத்து வடிவம் பெற்றன. ஆண்டிகள் மடம் கட்டுவதுபோல் நிதியே இல்லாமல் "திருக்குறள் கருத்தரங்கு மலர் - 1974" என்ற தலைப்பில் வெளிவந்தது ஒரு பகீரதப் பிரயத்தனமாகும். பிறமாநிலங்களில் பணியாற்று வோருக்குத்தான் இதன் சிரமம் நன்கு புரியும். இந்தக் கருத்தரங்கில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து பங்கு கொண்டமை ஒரு தனிச்சிறப்பு. - 12 அடுத்து 1974-75இல் துணைவேந்தர் டாக்டர் ), ஜகந்நாத ரெட்டி தலைமையில் நடைபெற்ற சிலப்பதிகாரக் கருத்தரங்கிலும் பல்கலைக் கழக ஆணையை நிதி உதவி சிலம்பை அறிமுகம் செய்வதில் விரிவான திட்டம் வகுக்கப் பெற்றது. தமிழக கல்வி நிதி அமைச்சர் தலைமை வகித்தார். டாக்டர் W.C. குழந்தைசாமி சென்னைத் தொழிற்றுறைக் கல்வி இயக்குநர்)இளங்கோ இதயத்தைத் திறந்து காட்டும் பாங்கில் ஒரு சிறப்புரையும். டாக்டர் ச.வே.சுப்பிரமணியம் இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் கருத்தரங்கின் அடிப்படைக் கருத்தை விளக்கும் பாங்கில் ஒரு சிறப்புரையும் நிகழ்த்தினர். வழக்கம்போல் நான்கு அமர்வுகள் இருந்தன. ஓர் அமர்வுக்கு டாக்டர் ந. சஞ்சீவி தலைமையேற்று ஓர் ஆய்வுக்கட்டுரையும் படித்தார். வேறு இருபது அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரை படித்தனர். 13 1976-77இல் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் ஆதரவில் கம்பராமாயணக் கருத்தரங்கு நடைபெற ஏற்பாடு செய்தேன். துணைவேந்தர். டாக்டர் K. சச்சிதானந்த 9 நான் நடத்தும் கருத்தரங்குகள் எவ்வாறு அமையும் என்பதைத் 6 தெரிவிக்கவே இங்கு விரிவாகக் காட்டப்பெற்றது.