பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நீங்காத நினைவுகள் இஃது ஒரு மரபாக வழங்கிவரும் பழக்கமாகும். இதனால் புதிய துணைவேந்தரை எடைபோட்டுப் பார்ப்போருக்கு ஒரு வாய்ப்பு கால்கை பிடிப்போருக்கும் ஒரு வழி. டாக்டர் ரெட்டியின் பேச்சு நன்றாக இருக்கும். சிலர்போல் வாய்க்கு வந்தபடி பேசமாட்டார். பேச வேண்டிய பொருளை நன்கு சிந்தித்து வகைப்படுத்திக் கொண்டு வந்து பேசுவார். பேசுவதற்கும் விரும்புவார். பேசுவதற்குத் தினவுடைய வாயைப் பெற்றவர். இவரது இந்தப் பழக்கத்தை மிக விரைவில் எல்லோராலும் அறிந்து கொள்ள முடிந்தது. நான் பிறதுறைகளில் நடைபெறும் கூட்டங்களுக்குப் போய்வந்து கொண்டிருந்தேன். தமக்கும் தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சிறிது தெரியும் என்பதைப் புலப்படுத்திக் கொள்வார். பேசும் போது நான் அக்கூட்டத்தில் இருப்பது தெரிந்துவிட்டாலோ தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது "கம்பராமாயணத்தில் ஏழு தொகுதிகள்" என்பார்: "திருக்குறள் உலகப் பெரிய இலக்கியங்களுள் ஒன்று" என்று குறிப்பிடுவார். "சங்க இலக்கியங்கள்", "தேசியகவி பாரதியாரின் படைப்புகள் என்று பேசுவார். சரளமான ஆங்கிலம் இவர் திருவாயினின்று பொழியும். சில கூட்டங்கட்கு நான் போகமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். அப்போது "இவர்தம் திருக்கண்கள் என் இருப்பைத் துழாவும் என்றும் டாக்டர் ரெட்டியர் எங்க்ே? வரவில்லையா?" என்று கேட்பார் என்றும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். "டாக்டர் ரெட்டியாரின் முயற்சியால் தமிழக மானியம் வந்திருக்கின்றது. வருகிற ஆண்டு தமிழ் முதுகலை வகுப்பு தொடங்கப்படும்" என்று குறிப்பிடுவார். "நாவலர் நெடுஞ்செழியனைக் கொண்டு விழா அமைத்து முதுகலை வகுப்பு தொடங்கலாமா? என்பார் நான் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டால், சில சமயம் இவரது பேச்சு அரசியல்வாதியின் பேச்சுபோல் ஒளிவிட்டுக் காட்டும். கூடியிருப்போர் மகிழ்வதற்காகவே சில நிகழ்ச்சிகளை நகைச்சுவையாகக் 8 டாக்டர் W.C. வாமன் ராவ் துவே துறைகளின் கூட்ட அழைப்பை ஏற்றுக் கொள்வதில்லை. பேசுவதற்கு ஆசிரியர்களே ஏற்றவர்கள் என்ற கொள்கையுடையவர். -