பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 285 குறிப்பிடுவார். பேச்சின் போக்கு இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும் அமையும். - நினைவு 5 டாக்டர் ஜகந்நாத ரெட்டி காலத்தில் கட்டடங்கள் என்றுமில்லாத அசுர வேகத்தில் வளர்ந்தன; விரிந்தன. ஒவ்வொரு சிறு நிகழ்ச்சிகளிலும் இவரது கவனம் சென்றது. ஒரு பெரிய பொறிஇயல் வல்லுநர்போல் செயற்பட்டார் வசதிகள் வளர்ந்தமை ஒருபுறமிருக்க, எதிலும் இவர் உள்ளத்தில் முகிழ்த்த கலை உணர்ச்சி கட்டடங்களிலும் வசதிகளிலும் துலங்கின. பல்கலைக்கழக வளாகமே ஓர் இந்திர பவனம்போல் மாறத் தொடங்கியது. வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைந்த மண்சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது புழுதிகளைக் கிளப்பிக் கொண்டு செல்லுவதால், மாணாக்கர்கள். பல்கலைக்கழகத்திற்கு வரும் பெற்றோர்கள் முதலியவர்களின் உடல்நலம் கெடும் என்பதை அறிந்த துணைவேந்தர் எங்கெங்கோ ஒதுங்கிக் கிடந்த நிதிகளைத் தேடி எடுத்து முதல்வேலையாகத் தார்சாலையாக மாற்றச் செய்தார். எத்தனை வாகனங்கள் ஓடினாலும் புழுதியும் தூசியும் கிளம்பாத சூழ்நிலை வளாகத்திற்குப் புதியபொலி வினை நல்கியது. ஆசிரியர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளும் தார்சாலைகளாயின. எங்கெங்கு மரங்கள் இருந்தால் அழகுதரும் என்று கருதினாரோ அங்கங்கெல்லாம் மரங்களை நட்டுப் பாதுகாப்புடன் பராமரிக்கச் செய்தார். இவர்காலத்தில் போடப்பெற்ற (1970) தார் சாலைகள் நிதி வசதியில்லாமையால் பராமரிப்பின்றி பள்ளம், படுகுழிகளாகக் கிடந்தன. 1992இல் அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடு திருப்பதியில் நடைபெற்றபோது திருப்பதி தேவஸ்தான நிர்வாக வாரியத்தின் தலைவராக இருந்த திரு T. சுப்பராம ரெட்டியின் கருணையுள்ளத்தினால், "திருப்பதியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தார்சாலைகள் எல்லாம் புதுப்பிக்கப் பெற்றன. டாக்டர் ஜகந்நாத ரெட்டி காலத்திற்குப் பிறகு போடப்பெற்ற மண்சாலைகள் யாவும் தார்சாலைகளாக மாறி வளாகத்திற்குப் புதிய பொலிவினைத் தருகின்றன. - . .