பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 287 அலுவலகம், பேரவை மண்டபம் முதலியவை அடங்கிய பெரிய கட்டடம் இது. இது "நீலம் சஞ்சீவிரெட்டி பவனம்" என்ற திருநாமத்தால் பொலிவுடன் திகழ்கின்றது. இதில் மின்விசை ஏற்றம் பொருத்தப் பெற்றுள்ளது. பேரவையின் இருத்கை வசதிகள் மிக அழகாக அமைந்துள்ளன. ஒவ்வொரு உறுப்பினரும் பேசுவதற்கு மாநிலச் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றப் பேரவையிலும் இருப்பனபோல் ஒலிவாங்கிகள் (Micro phones) பொருத்தப் பெற்றுள்ளன. நுழைவாயிலை ஏழுமலையான் திருவுருவப்படம் அணிசெய்கின்றது. இருக்கை வசதிகள் பணிமேடை முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. ஒருபக்கம் வேமனர் திருவுருவப்படமும் தெலுங்குத் துறை வைத்தது அதற்கு எதிர்ப்பக்கம் திருவள்ளுவர் திருவுருவப்படம் தமிழ்த்துறை வைத்தது அணி செய்கின்றன. முதலில் வைத்தது தமிழ்த்துறை, ஒவ்வொரு விவரங்களிலும் டாக்டர் ரெட்டியின் கற்பனையுள்ளத்தையும், கலை உணர்ச்சியையும் கண்டு மகிழலாம். (2) கலையரங்கம் : (Auditorium) இஃது உருப்பெறும்போது ஒவ்வொரு சிறுவிவரங்களிலும் தம் நேர்க்கவனத்தைச் செலுத்தினார். அதிபரவளைவு அமைப்பிலுள்ளள (Hyperbola) இம்மண்டபத்தின் உட்புற அமைப்பு கண்டாரை வியக்க வைக்கும் பான்மையது. இருக்கை வசதிகள் நாடக நாட்டியங்களுக்கான மேடை அமைப்பு திரைச்சீலை அமைப்புகள் இவை மிகச் சிறப்பான முறையில் அமைக்கப் பெற்றன. இவ்வளவும் தயாராகித் திறப்பு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப் பெற்றுவிட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகத் தான் திரைச்சீலைகள் பொருத்தப் பெற்றன. மேடைக்கு மேலே மின்சாரத்தைக் கொண்டு ஏதோ பற்ற வைக்கப்பெற்றது. வேலையும் இரவில் நடைபெற்றது. தீப்பொரி குறிதவறி வேறுதிசையில் சென்று அரங்கக் கூரையில் தீப்பற்றிக் கொண்டது. அங்கிருந்தவர்கட் கெல்லாம் ஒரு பிரமிப்பு ஏற்பட்டுவிட்டது. திருவேங்கட்டரங்கம் என்பவர் திரைச்சீலைகளை உருவிக்கொண்டு வெளியில் ஓடிவந்துவிட்டார். பிறரும் வெளியேறினர். சிறிது நேரத்திற்குள் 9 பற்றவைத்தவர் குடிபோதையில் இருப்பதாகப்பேசிக்கொண்டனர் .