பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் P. ஜகந்நாத ரெட்டி 289 தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமைகாட்டி விலக்கிடும் தெய்வம்: உய்வம் என்ற கருத்துடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம், செய்வமென்றொரு செய்கை எடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடும் தெய்வம்: கைவருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம்" என்ற பாரதியாரின் பாடல் இதை எழுதுங்கால் என் மனத்தில் எழுகின்றது. துணை வேந்தர், உன்னை உள்ள படியறிவோம்; உலகம் உள்ள திறமுள்ளோம்; பின்னை யறியோம்; முன்னறியோம் இடையும் அறியோம் பிறழாமல்; நின்னை வணங்கி நீவகுத்த - நெறியின் நிற்கும் அதுவல்லால் என்னை அடியேம் செயற்பால இன்பதுன்பம் இல்லோனே?" என்ற பாடலை அறியாராயினும் இதிலுள்ள கருத்துகள் அவர் சிந்தையில் முகிழ்த்திருக்க வேண்டும். உடலிலுள்ள நரைதிரை முதலியன ஆன்மாவைச் சேராதவாறுபோல் உலகத்துயிர்க்கெல்லாம் உயிரான பரமான்மாவைச் சேரா என்ற கருத்து நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. இறையருளால் முரட்டுத் துணிவோடு செயற்பட்டார். துணைவேந்தர். பல்கலைக்கழகப் பணியாளர் எல்லா 9ಣಖತಿಲ್ಲು ஒருநாள் ஊதியம் தந்தனர். சில வங்கிகள் நன்கொடைகள் வழங்கின. 10 பாக, : வெள்ளைத் தாமரை - 4 11. கம்ப. யுத்த பிரம்மாத்திரப் 223 12 ஆந்திரா வங்கி ரு 25,000/- வழங்கியது. இதனால் ஸ்டேட் வங்கியிலி ருந்து சில கண்க்குகள் இந்த வங்கிக்கு மாற்றப்பெற்றன.